புதுச்சேரி

பளு தூக்கும் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற மாணவி கிருத்திகாவுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்த காட்சி.

புதுவை மாணவி சாம்பியன்ஷிப் பட்டம் ரங்கசாமி வாழ்த்து

Published On 2022-06-26 06:01 GMT   |   Update On 2022-06-26 06:01 GMT
  • புதுவை முதலியார் பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றார்.
  • பளு தூக்கும் வீராங்கணையான கிருத்திகா கோவையில் கடந்த 17-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடந்த ஆசிய பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றார்

புதுச்சேரி:

புதுவை முதலியார் பேட்டை திரு.வி.க நகரைச் சேர்ந்தவர் முருகானந்தம். இவரது மகள் கிருத்திகா (வயது 17). இவர் தனியார் பள்ளியில் பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றார்.

பளு தூக்கும் வீராங்கணையான கிருத்திகா கோவையில் கடந்த 17-ந் தேதி தொடங்கி 22-ந் தேதி வரை நடந்த ஆசிய பளு தூக்கும் போட்டியில் பங்கேற்றார். சப்-ஜூனியர் பிரிவில் கிருத்திகா பங்கேற்று 185 கிலோ பளு தூக்கி முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். இதுபோல் 85 கிலா பெஞ்ச் பிரஸ் போட்டியில் முதலிடம் பெற்று தங்கமும், மற்றொரு போட்டியில் 2-ம் இடம் பெற்று வெள்ளி பதக்கம் பெற்று ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை வென்றார். அவருக்கு ஆசிய இரும்பு பெண்மணி என்ற பட்டம் வழங்கப்பட்டது.

இதையடுத்து சாம்பியன் பட்டம் வென்று புதுவை திரும்பிய மாணவி கிருத்திகா முதல்-அமைச்சர் ரங்கசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாணவியின் தந்தை முருகானந்தம், பயிற்சியாளர் பாக்யராஜ் மற்றும் பளு தூக்கும் சங்க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News