புதுச்சேரி

பாரம்பரிய உணவு வகைகளை தயாரிக்கும் பெண்கள்.

எந்திரங்கள் இல்லாமல் பாரம்பரிய உணவு வகைகளை கைகளால் தயாரிக்கும் பெண்கள்

Published On 2023-09-07 08:57 GMT   |   Update On 2023-09-07 08:57 GMT
  • பாரம்பரிய உணவு வகைகளை இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
  • வாழைத்தண்டு துவையல், வாழைப்பூ ஊறு காய்க்கு அதிக வரவேற்புள்ளது.

புதுச்சேரி:

பாரம்பரிய உணவு வகைகளை மீட்கும் நடவடிக்கையில் சர்வதேச இயற்கை அறக்கட்டளை என்ற சமூக அமைப்பு களம் இறங்கியுள்ளது.

 கிராம பெண்களுக்கு வேலை கொடுப்பதுடன் அவர்கள் மூலம் பாரம்பரிய உணவு வகைகளை இயற்கை முறையில் தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

கிழக்கு கடற்கரை சாலையில் புதுவையை அடுத்த கூனிமேடு கிரா மத்தில் இயற்கை சூழலில் பெண்கள் பழச்சாறு, பழங்களின் ஜாம்,கீரை மற்றும் காய்கறிகளை கொண்டு துவையல், ஊறு காய், பொடி ஆகியற்றை தயாரித்து வருகின்றனர்.

வகை வகையான இட்லி பொடி, பழச்சாறு, ஜாம், உறுகாய் ஆகியவற்றை எந்திரங்கள் இன்றி கைகளால் பெண்கள் உருவாக்குகின்றனர்.இங்கு தயாராகும் உணவு பொருட்கள் ஆரோவில், அரவிந்தர் ஆசிரமம், வனத்துறை, கைவினை கிராமம் ஆகிய இடங்களில் மக்கள் விரும்பி வாங்கு கின்றனர். அதிலும், இவர்கள் தயாரிக்கும் வாழைத்தண்டு துவையல், வாழைப்பூ ஊறு காய்க்கு அதிக வரவேற்புள்ளது.

2019-ல் 2 பெண் தொழிலாளர்களோடு தொடங்கப்பட்ட பாரம்பரிய உணவு தயாரிப்பு தொழிலில் தற்போது 15 பெண்கள் பணியாற்று கின்றனர்.

Tags:    

Similar News