புதுச்சேரி

கோப்பு படம்.

குறைந்தபட்ச சம்பளம் அறிவிக்க கோரி தொழிலாளர்கள் பேரணி

Published On 2023-10-07 08:46 GMT   |   Update On 2023-10-07 08:46 GMT
  • அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
  • புதிய பஸ்நிலையத்திலிருந்து சட்டசபை நோக்கி தொழிலாளர்களின் மாபெரும் பேரணி சி.ஐ.டி.யூ. சார்பில் நடத்தப்படும்.

புதுச்சேரி:

புதுவை மாநில சி.ஐ.டி.யூ. செயலாளர் சீனுவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

சி.ஐ.டி.யூ. பல கட்ட போராட்டங்களுக்கு பின் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலச்சங்கம் அமைக்கப்பட்டது. இந்த நலச்சங்கத்தை வாரியமாக மாற்ற வேண்டும் என தொடர்ந்து போராடி வருகிறோம். இன்று வரை அமைப்புசாரா நல வாரியத்தை அரசு அமைக்கவில்லை. புதுவையில் ரேஷன் கடைகள் மூடப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

எனவே பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்க வேண்டும். 7 ஆண்டாக தொழிற்பேட்டைகளில் குறைந்தபட்ச சம்பளத்தை தொழிலாளர் துறை அறிவிக்க வில்லை. தொழிலாளர் துறையில் ஆணையர் பதவி பல ஆண்டாக நிரப்பவில்லை. பல தொழிற்சாலைகள், பஞ்சாலைகள் மூடப்பட்டு தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வருகின்றனர். தொழிலாளர்களின் கோரிக்கைகள் அனைத்தையும் வலியுறுத்தி வருகிற 17-ந் தேதி புதிய பஸ்நிலையத்திலிருந்து சட்டசபை நோக்கி தொழிலாளர்களின் மாபெரும் பேரணி சி.ஐ.டி.யூ. சார்பில் நடத்தப்படும். 

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News