null
கூட்டுறவு நூற்பாலையில் மே தினத்தில் கண்ணீர் மல்க சென்ற ஊழியர்கள்
- திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் மே தின விழாவை ஆலையின் வாயிற் படியின் அருகில் நடைபெற்றது.
- விழாவில் ஐ.என்.டி யு.சி பி.எம்.சி தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.
புதுச்சேரி:
திருபுவனை கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் மே தின விழாவை ஆலையின் வாயிற்படியின் அருகில் நடைபெற்றது. விழாவில் ஐ.என்.டி யு.சி பி.எம்.சி தலைவர் சிவசங்கரன் தலைமை தாங்கினார்.
விடுதலை முன்னணி தொழிற்சங்க தலைவர் நடராஜன் முன்னிலை வகித்தார். கடந்த ஒரு ஆண்டு கூட்டுறவு நூற்பாலை இயங்காத நிலை யில், வேலையில்லாமல் வீட்டில் இருந்து கொண்டு பல்வேறு பணிகளை செய்து தமது குடும்பத்தை காப்பாற்றி வரும் தொழிலாளர்கள், தொழிலாளர்கள் தினம் கொண்டாட முடியாமல் இருந்த நிலையில், மே தினத்தில் அதே தொழிற்சாலையில் பணி புரிந்த ஐ.என்.டி.யு.சி, பி.எம்.சி. செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் கமலக்கண்ணன் ஆகியோர் பணி ஓய்வு பெற்று செல்லும் விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் 50-க்கும் மேற்பட்ட ஆலை தொழிலாளர்கள் கலந்து கொண்டு மே தின விழாவில் தங்களுடைய வாழ்த்துக்களையும், வேதனைகளையும் கூறி பேசினார்கள். கூட்டுறவு நூற்பாலை கடந்தண்டாக இயங்கவில்லை, கொடுக்க வேண்டிய சம்பள பாக்கியும் தரவில்லை, ஆலை நிர்வாகம் தொழிலாளருக்கு தர வேண்டிய செட்டில்மெண்ட் பணம் தரவில்லை, நிரந்தர வேலையும் இல்லை, வாழ்நாள் முழுவதும் பல வருடம் கடின உழைப்பில் பணிபுரிந்தும், ஓய்வு பெறும் நேரத்தில் சம்பளம் கிடைக்காமல், குடும்பத்தாரை காக்க முடியாமல் தலையை குனிந்து நிற்கிறோம். அரசு இந்த ஆலையினை இயக்காமல் இன்று வரை எங்களை ஏமாற்றி வருகின்றது. எங்களைப் போன்ற ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் புதுவையில் பல்வேறு துறைகளில் பணிபுரிந்து வேலையை இழந்து மே தினத்தை கொண்டாட முடியாமல் உள்ளனர். இருந்த போதிலும் மே தினம் கொண்டாடும் அனை த்து தொழிலாளர்களுக்கும் எங்க ளுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் என்று வேதனையோடு கூறி கண்ணீர் மல்க அழுது தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மே தினத்தில் கூட்டுறவு நூற்பாலை ஊழியர்கள் கண்கலங்கி சென்றது பார்ப்போரை நெகிழ வைத்தது.