- ஜிப்மர் டாக்டர் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 62). இவர் ஜிப்மரில் டாக்டராக பணிபுரிந்து வந்தார்.
புதுச்சேரி:
ஜிப்மர் டாக்டர் மர்மான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் ஜெயசங்கர் (வயது 62). இவர் ஜிப்மரில் டாக்டராக பணிபுரிந்து வந்தார். அங்குள்ள ஊழியர் குடியிருப்பில் ஜெயசங்கர் தனியாக வசித்து வந்தார். அவரை அங்கு ஒப்பந்தத்தில் எலக்டீரியனாக பணிபுரியும் காமராஜர் நகரை சேர்ந்த சங்கர் என்பவர் தினமும் பார்த்து பேசிவிட்டு செல்வார். ஜெயசங்கரின் வீட்டை அவ்வப்போது யசோதா என்ற பெண் சுத்தம் செய்து விட்டு செல்வார்.
இந்த நிலையில் காலை யசோதா டாக்டர் வீட்டை சுத்தம் செய்ய வந்த போது ஜெயசங்கர் மல்லாந்த நிலையில் இறந்து கிடப்பதை கண்டு திடுக்கிட்டார். இது குறித்து அவர் டாக்டர் ஜெயசங்கருக்கு நெருக்கமான எலக்டீரிசியன் சங்கருக்கு தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சங்கர் கோரிமேடு போலீசில் புகார் தெரிவித்தார். போலீசார் ஜெயசங்கர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இறந்து போன ஜெயசங்கருக்கு நீரழிவு நோய் இருந்ததாக கூறப்படுகிறது. அதற்காக அவரே ஊசி போட்டுக் கொள்வார் என தெரிகிறது.
நீரிழிவு நோய் அதிகம் பாதித்ததால் டாக்டர் ஜெயசங்கர் இறந்து போனாரா? அல்லது வேறேதும் காரணமா என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.