மொபைல்ஸ்

இந்தியாவில் தொடங்கிய ஐபோன் 16 விற்பனை... 5ஐபோன்களை வாங்கிச் சென்ற நபர்...

Published On 2024-09-20 06:23 GMT   |   Update On 2024-09-20 06:23 GMT
  • ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது.
  • இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மொபைல் போன்களின் உலகில் தனக்கென தனி சந்தையை உருவாக்கி வைத்துள்ள ஆப்பிள் நிறுவனம் தங்களது தனித்துவமான தயாரிப்புகளை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது.

ஆப்பிள் நிறுவனம் கடந்த 2007-ம் ஆண்டில் முதன் முதலாக ஐபோன் மாடலை அறிமுகம் செய்தது. ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் சுமார் 15 சதவீத பங்கை ஐபோன் கொண்டுள்ளது.

 



ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதத்தில் புதிய மாடல் ஐபோன்களை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் நடப்பு ஆண்டில் ஐபோன் 16 சீரிஸ் போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

ஸ்மார்ட்போன் வணிகம் சார்ந்த உலக சந்தையில் கணிசமான பங்கை ஐபோன் தனக்கென கொண்டுள்ளது. இந்த முறை ஏஐ அம்சங்கள், கேமரா கன்ட்ரோல் பட்டன் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டைப் போலவே, புதிய தலைமுறை ஐபோன்களில் ஐபோன் 16, ஐபோன் 16 பிளஸ், ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய நான்கு மாடல்கள் உள்ளன.

இந்தியாவில் இன்று முதல் ஐபோன் 16 விற்பனை தொடங்கியுள்ள நிலையில் டெல்லி, மும்பை போன்ற நகரங்களில் உள்ள ஐபோன் ஷோரூம்களில் பொதுமக்கள் நீண்ட வரிசையில் பல மணி நேரம் காத்திருந்து மொபைலை வாங்கி செல்கின்றனர்.

மும்பை ஷோரூமில் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் மொபைல் வாங்கியவர் கூறும்போது, ஐஓஎஸ் 18-ஐ விரும்பியதால், ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் வாங்கியுள்ளேன். ஜும் கேமராவின் தரம் சிறப்பாக உள்ளது என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.

மற்றொருவர் வரிசையில் காத்திருந்து 5 ஐபோன்களை வாங்கினார். தனது மனைவி மற்றும் குழந்தைகளுக்காக வாங்கியதாக அவர் கூறினார்.

Tags:    

Similar News