மொபைல்ஸ்

விரைவில் இந்தியா வரும் மோட்டோ G14.. சூப்பர் டீசர் வெளியிட்ட மோட்டோரோலா!

Published On 2023-07-24 08:29 GMT   |   Update On 2023-07-24 08:29 GMT
  • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய G சீரிஸ் ஸ்மார்ட்போன் ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ் கொண்டிருக்கிறது.
  • 5000 எம்ஏஹெச் பேட்டரி கொண்டிருக்கும் புதிய மோட்டோ G14 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய மோட்டோ G14 ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் ஆகஸ்ட் 1-ம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போன் பற்றிய தகவல்கள் தொடர்ந்து இணையத்தில் லீக் ஆகி வந்த நிலையில், தற்போது இதன் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

வெளியீட்டு தேதியுடன் மோட்டோ G14 ஸ்மார்ட்போனின் டிசைன் மற்றும் அம்சங்கள் பற்றிய தகவல்களும் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த மாடலில் 6.5 இன்ச் FHD+ ஸ்கிரீன், ஸ்டீரியோ ஸ்பீக்கர்கள் மற்றும் டால்பி அட்மோஸ் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் யுனிசாக் T616 பிராசஸர், 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது.

 

இத்துடன் பிரத்யேக டூயல் சிம் ஸ்லாட், மைக்ரோ எஸ்டி ஸ்லாட், ஆன்ட்ராய்டு 13 ஒஎஸ், 50MP பிரைமரி கேமரா, மேக்ரோ கேமரா, நைட் விஷன் சப்போர்ட் வழங்கப்படுகிறது. 5000 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படும் மோட்டோ G14 ஸ்மார்ட்போன் 20 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது.

மேலும் IP52 டஸ்ட் மற்றும் ஸ்பிலாஷ் ரெசிஸ்டன்ட் வசதி, பக்கவாட்டில் கைரேகை சென்சார் வழங்கப்படுகிறது. மோட்டோ G14 ஸ்மார்ட்போனிற்கு ஆன்ட்ராய்டு 14 அப்டேட் மற்றும் மூன்று ஆண்டுகளுக்கு செக்யுரிட்டி அப்டேட்கள் வழங்கப்படுகிறது.

புதிய மோட்டோ G14 ஸ்மார்ட்போன் புளூ மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கும் என்று டீசர்களில் தெரியவந்துள்ளது. இதன் விலை மற்றும் இதர விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகிவிடும். இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்பட இருக்கிறது.

Tags:    

Similar News