மொபைல்ஸ்

ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸருடன் உருவாகும் புது மோட்டோ ஸ்மார்ட்போன்

Published On 2022-10-17 04:07 GMT   |   Update On 2022-10-17 04:07 GMT
  • மோட்டோரோலா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிளாக்‌ஷிப் ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
  • இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளம் மூலம் அம்பலமாகி இருக்கிறது.

மோட்டோரோலா நிறுவனம் கடந்த ஆண்டு டிசம்பர் மாத வாக்கில் மோட்டோ X30 ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருந்தது. இதே ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 30 ப்ரோ எனும் பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. தற்போது இந்த ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷன் உருவாக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் புது ஸ்மார்ட்போன் மோட்டோ X40 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் கூறப்படுகிறது.

புதிய மோட்டோ ஸ்மார்ட்போன் விவரங்கள் சீனாவின் 3சி சான்றளிக்கும் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. இதுதவிர பிரபல டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷனும் இந்த ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள் எவை என்ற விவரங்களை தெரிவித்து இருக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்போன் FHD+ டிஸ்ப்ளே, ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 பிராசஸர் கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இத்துடன் மோட்டோ X40 ஸ்மார்ட்போன் 50MP பிரைமரி கேமரா சென்சார் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது. ஸ்னாப்டிராகன் 9 ஜென் 2 பிராசஸர் கொண்ட குறைந்த விலை ஸ்மார்ட்போன் என்ற பெருமையை மோட்டோ X40 பெறும் என்றும் தகவல் வெிளியாகி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் XT2301-5 எனும் மாடல் நம்பர் கொண்டிருக்கிறது. இதன் விவரங்களும் 3சி வலைதளத்தில் இடம்பெற்று இருந்தது.

அதில் இந்த ஸ்மார்ட்போன் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோ X30 ஸ்மார்ட்போனிலும் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. முன்பை போன்றே இந்த ஆண்டும் மோட்டோ X40 ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் மோட்டோ எட்ஜ் 40 ப்ரோ பெயரில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

எனினும், புதிய மோட்டோ X40 பற்றி மோட்டோரோலா சாகர்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை. முந்தைய மோட்டோ X30 மாடலில் 6.7 இன்ச் OLED FHD+ டிஸ்ப்ளே, 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 9 ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி, 50MP பிரைமரி கேமராவுடன் மூன்று லென்ஸ்கள், 60MP செல்பி கேமரா, 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 68 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

Tags:    

Similar News