இன்-ஸ்கிரீன் கேமரா கொண்ட புது ஸ்மார்ட்போன் அறிமுகம்
- ZTE நிறுவனம் இன் ஸ்கிரீன் கேமரா சென்சார் கொண்ட புதிய அக்சான் 30S ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது.
- இந்த ஸ்மார்ட்போன் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் மற்றும் அதிகபட்சமாக 12 ஜிபி ரேம் கொண்டிருக்கிறது.
ZTE நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த அக்சான் 30 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வெர்ஷனாக புதிய ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போனினை சீன சந்தையில் அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ZTE அக்சான் 30S மாடலில் 6.92 இன்ச் FHD+OLED 10-பிட் பேனல் மற்றும் 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், 5 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், விசி லிக்விட் கூலிங் தொழில்நுட்பம் வழங்கப்பட்டு உள்ளது.
இத்துடன் 16MP இன்-டிஸ்ப்ளே கேமரா சென்சார், இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருக்கிறது. புகைப்படங்களை எடுக்க 64MP பிரைமரி கேமரா, 8MP 120 டிகிரி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 5MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP டெப்த் சென்சார், 4200 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 55 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
ZTE அக்சான் 30S அம்சங்கள்:
6.92 இன்ச் 2460x1080 பிக்சல் FHD+ OLED 120Hz ரிப்ரெஷ் ரேட்
ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர்
அட்ரினோ 650 GPU
8ஜிபி LPDDR5 ரேம், 128ஜிபி UFS3.1 மெமரி
12ஜிபி LPDDR5 ரேம், 256ஜிபி UFS3.1 மெமரி
மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
ஆண்ட்ராய்டு 12 மற்றும் மைஒஎஸ்12
64MP பிரைமரி கேமரா, எல்இடி பிளாஷ்
8MP அல்ட்ரா வைடு லென்ஸ்
5MP மேக்ரோ லென்ஸ்
2MP டெப்த் சென்சார்
16MP செல்பி கேமரா
இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
யுஎஸ்பி டைப் சி ஆடியோ
5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6
ப்ளூடூத் 5.1, யுஎஸ்பி டைப் சி
4200 எம்ஏஹெச் பேட்டரி
55 வாட் பாஸ்ட் சார்ஜிங்
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ZTE அக்சான் 30S ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ நிறங்களில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை 1698 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 19 ஆயிரத்து 310 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை 2198 யுவான் இந்திய மதிப்பில் ரூ. 24 ஆயிரத்து 995 என நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் விற்பனை சீனாவில் ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது.