புதிய கேஜெட்டுகள்

AI அம்சங்களுடன் QLED டி.வி.க்களை அப்டேட் செய்த சாம்சங்

Published On 2024-04-17 14:34 GMT   |   Update On 2024-04-17 14:34 GMT
  • ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.
  • டி.வி. மாடலுக்கு ஏற்ப 20 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

சாம்சங் இந்தியா நிறுவனம் நியோ QLED 8K மற்றும் புதிய QLED 4K டி.வி. மாடல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது. புதிய சாம்சங் டி.வி.க்களில் ஏ.ஐ. சார்ந்த அம்சங்கள் மூலம் காட்சி மற்றும் ஒலியின் தரம் மேம்படுத்தப்படுகிறது. இத்துடன் ஏ.ஐ. சார்ந்த பிரத்யேக கேமிங் மோட், பவர் சேவிங் மோட் வழங்கப்படுகிறது.

புதிய சாம்சங் நியோ QLED 8K டி.வி. QN900D மற்றும் QN800D மாடல்கள் 65-இன்ச், 75-இன்ச் மற்றும் 85-இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இவற்றில் NQ8 ஏ.ஐ. ஜென் 3 பிராசஸர் மற்றும் பில்ட்-இன் NPU ஏ.ஐ. சார்ந்த பல்வேறு அம்சங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

புதிய சாம்சங் நியோ QLED 8K டிவி துவக்க விலை ரூ. 3 லட்சத்து 19 ஆயிரத்து 990 என்றும் நியோ QLED 4K டி.வி. விலை ரூ. 1 லட்சத்து 39 ஆயிரத்து 990 என்றும் சாம்சங் OLED டி.வி. விலை ரூ. 1 லட்சத்து 64 ஆயிரத்து 990 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

குறுகிய கால சலுகையாக ஏப்ரல் 30 ஆம் தேதி வரை வாடிக்கையாளர்கள் தேர்வு செய்யும் டி.வி. மாடலுக்கு ஏற்ற வகையில், ரூ. 79 ஆயிரத்து 990 மதிப்புள்ள சவுண்ட்பார், ரூ. 59 ஆயிரத்து 990 மதிப்புள்ள ஃபிரீ ஸ்டைல் ப்ரோஜெக்டர், ரூ. 29 ஆயிரத்து 990 மதிப்புள்ள மியூசிக் ஃபிரேம் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்படுகிறது. இத்துடன் டி.வி. மாடலுக்கு ஏற்ப 20 சதவீதம் வரை கேஷ்பேக் வழங்கப்படுகிறது.

Tags:    

Similar News