புதிய கேஜெட்டுகள்

ஏ17 பயோனிக் சிப்செட் கொண்ட ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் அறிமுகம்

Published On 2023-09-12 18:26 GMT   |   Update On 2023-09-12 18:26 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய டைட்டானியம் டிசைன் கொண்டுள்ளது.
  • ஐபோன் 15 ப்ரோ சீரிசில் உள்ள ஏ17 சிப்செட் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ஆப்பிள் நிறுவனம் ஐபோன் 15 மற்றும் ஐபோன் 15 பிளஸ் மாடல்களை தொடர்ந்து ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடல்களை அறிமுகம் செய்தது. புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்கள் டைட்டானியம் டிசைன் கொண்டு உருவாக்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் முற்றிலும் புதிய ஆப்பிள் ஏ17 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த பிராசஸர் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

 

புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் முற்றிலும் புதிய யு.எஸ்.பி. டைப் 3 போர்ட் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த யு.எஸ்.பி. 3 போர்ட் அதிகபட்சம் நொடிக்கு 10 ஜி.பி. வரையிலான டேட்டா பரிமாற்றத்தை சாத்தியப்படுத்தும். ஐபோன் 15 ப்ரோ மாடலில் 48MP பிரைமரி கேமரா சென்சார், 12MP 3x டெலிஃபோட்டோ கேமரா, OIS, 12MP அல்ட்ரா வைடு கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் மாடலில் 5x டெலிஃபோட்டோ கேமரா, 120mm ஃபோக்கல் லென்த் வசதி உள்ளது.

ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களில் ஸ்பேஷியல் வீடியோ பதிவு செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த வீடியோக்களை ஆப்பிள் விஷன் ப்ரோ ஹெட்செட்டில் பார்த்து ரசிக்க முடியும். புதிய ஐபோன் 15 ப்ரோ விலை 999 டாலர்கள், ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் விலை 1199 டாலர்கள் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. 

புதிய ஐபோன் 15 ப்ரோ சீரிஸ் மாடல்களுக்கான முன்பதிவு செப்டம்பர் 15-ம் தேதி துவங்குகிறது. விற்பனை அமெரிக்காவில் செப்டம்பர் 22-ம் தேதி துவங்க இருக்கிறது.

Tags:    

Similar News