புதிய கேஜெட்டுகள்

M3 சிப்செட் கொண்ட மேக்புக் ப்ரோ மாடல்கள்.. ரூ. 1.6 லட்சம் விலையில் அறிமுகம் செய்த ஆப்பிள்

Published On 2023-10-31 09:01 GMT   |   Update On 2023-10-31 09:01 GMT
  • ஆப்பிள் நிறுவனத்தின் M3 சீரிஸ் பிராசஸர்கள் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன.
  • புதிய பிராசஸர்கள் முந்தைய வெர்ஷனை விட அதிவேகமானது.

ஆப்பிள் நிறுவனம் தனது மேக்புக் ப்ரோ லேப்டாப் மாடல்களை முற்றிலும் புதிய M3, M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் பிராசஸர்களை கொண்டு அப்டேட் செய்திருக்கிறது. இந்திய நேரப்படி இன்று (அக்டோபர் 31) அதிகாலை நடைபெற்ற ஸ்கேரி ஃபாஸ்ட் நிகழ்வில் ஆப்பிள் நிறுவனம் தனது M3 சீரிஸ் சிப்செட்களை அறிமுகம் செய்தது.

இதில் M3, M3 ப்ரோ மற்றும் M3 மேக்ஸ் என மூன்று வகையான வேரியண்ட்கள் உள்ளன. புதிய M3 சீரிஸ் மாடல்கள் 3 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு இருக்கின்றன. M3 சீரிஸ் பிராசஸர்கள் முந்தைய வெர்ஷனை விட அதிவேகமானது என ஆப்பிள் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது. புதிய பிராசஸர்களை அறிவித்ததும், மேக்புக் ப்ரோ மற்றும் 24 இன்ச் ஐமேக் உள்ளிட்ட சாதனங்களை M3 சிப்செட்களுடன் ஆப்பிள் நிறுவனம் அறிவித்து விட்டது.

 

அதன்படி புதிய M3 சிப்செட் கொண்ட 14 இன்ச் மேக்புக் ப்ரோ, M1 சிப்செட் கொண்ட 13-இன்ச் மேக்புக் மாடலை விட 60 சதவீதம் வேகமானது ஆகும். இதேபோன்று M3 ப்ரோ சிப்செட் கொண்ட 14 மற்றும் 16 இன்ச் மேக்புக் ப்ரோ மாடல்கள், M1 ப்ரோ சிப்செட் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோ-வை விட 40 சதவீதம் வேகமானது.

புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அனைத்திலும் லிக்விட் ரெட்டினா XDR டிஸ்ப்ளே, 20 சதவீதம் அதிக பிரகாசமான SDR தரவுகளை, 600 நிட்ஸ், 1000 நிட்ஸ் பிரைட்னசில் காண்பிக்கிறது. இத்துடன் வைபை 6E, ப்ளூடூத் 5.3, அதிகபட்சம் 4 எக்ஸ்டர்னல் டிஸ்ப்ளேக்களை சப்போர்ட் செய்யும் வசதி கொண்டிருக்கிறது.

இந்திய சந்தையில் M3 சீரிஸ் பிராசஸர் கொண்ட மேக்புக் ப்ரோ விலை ரூ. 1 லட்சத்து 69 ஆயிரத்து 900 என்று துவங்குகிறது. இதன் டாப் எண்ட் மாடல் M3 மேக்ஸ் பிராசஸர் கொண்ட 16 இன்ச் மேக்புக் ப்ரோ விலை ரூ. 3 லட்சத்து 99 ஆயிரத்து 900 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

புதிய மேக்புக் ப்ரோ மாடல்கள் அனைத்தும் சில்வர், ஸ்பேஸ் கிரே மற்றும் புதிய ஸ்பேஸ் பிளாக் என மூன்று விதமான நிறங்களில் கிடைக்கின்றன.

Tags:    

Similar News