புதிய கேஜெட்டுகள்

ரூ. 32.81 லட்சம் விலையில் ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?

Published On 2023-07-03 03:27 GMT   |   Update On 2023-07-03 03:27 GMT
  • ஸ்பேஷியல் கம்ப்யூட்டரை கலை பொருளாக மாற்ற நினைத்ததன் விளைவு தான் கேவியர் எடிஷன் உருவாக காரணம்.
  • விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் 18 கேரட் தங்கத்தால் அழகுபடுத்தப்பட்டு உள்ளன.

ஆப்பிள் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற சர்வதேச டெவலப்பர்கள் மாநாட்டில் தனது அதிகம் எதிர்பார்க்கப்பட்ட மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ விஷன் ப்ரோ பெயரில் அறிமுகம் செய்தது. தற்போது துபாயை சேர்ந்த கேவியர் எனும் நிறுவனம் ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது.

புதிய மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்-ஐ ஸ்பேஷியல் கம்ப்யுட்டர் என்று ஆப்பிள் நிறுவனம் அழைக்கிறது. அதன்படி ஆப்பிள் ஸ்பேஷியல் கம்ப்யூட்டரை கலை பொருளாக மாற்ற நினைத்ததன் விளைவு தான் கேவியர் எடிஷன் உருவாக காரணம் என்று கேவியர் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.

 

ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் உருவாக டாம் ஃபோர்டின் ப்ளிப்-அப் மற்றும் குக்கி ஸ்கை மாஸ்க் உள்ளிட்டவைகளை கொண்டு அதிவநீன தொழில்நுட்பம் கொண்ட ஹெட்செட்-ஐ கேவியர் கலை பொருளாக உருவாக்கி இருக்கிறது. ஆப்பிள் விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் மற்றும் அதன் பாதுகாப்பு மாஸ்க் உள்ளிட்டவை 18 கேரட் தங்கத்தால் அழகுபடுத்தப்பட்டு உள்ளன. இதற்காக சுமார் 1.5 கிலோ தங்கம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த ஹெட்செட்-இன் ஹெட்பேண்ட் கொனொலி லெதர் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதே லெதர் ரோல்ஸ் ராய்ஸ் வாகனங்களிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது பயன்படுத்துவோருக்கு அதிக சவுகரியமாகவும், சிறப்பான அனுபவத்தையும் வழங்குகிறது.

 

ஆப்பிள் நிறுவனம் தனது விஷன் ப்ரோ ஹெட்செட் விலையை 3 ஆயிரத்து 499 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 2 லட்சத்து 87 ஆயிரம் என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. புதிய விஷன் ப்ரோ கேவியர் எடிஷன் விலை 39 ஆயிரத்து 900 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 32 லட்சத்து 73 ஆயிரம் என்று துவங்குகிறது. கேவியர் நிறுவனம் இந்த ஹெட்செட்-இன் 24 யூனிட்கள் மட்டுமே உருவாக்கப்பட இருக்கிறது. இவை அடுத்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது.

Tags:    

Similar News