இந்தியாவில் வெளியான அசுஸ் ரோக் Ally கையடக்க கேமிங் கன்சோல் - விலை, முழு விவரங்கள்!
- அசுஸ் ரோக் Ally இந்திய விற்பனை துவங்கி நடைபெற்று வருகிறது.
- புதிய ரோக் Ally மாடலுக்கு அசத்தல் சலுகைகள் அறிவிப்பு.
அசுஸ் நிறுவனம் இந்திய சந்தையில் தனது புதிய கையடக்க கேமிங் கன்சோலை கடந்த மாதம் அறிமுகம் செய்தது. இந்திய சந்தையில் வின்டோஸ் 11 ஒஎஸ் உடன் அறிமுகம் செய்யப்பட்ட முதல் கேமிங் கன்சோல் இது ஆகும்.
அறிமுக நிகழ்வை தொடர்ந்து, அசுஸ் ரோக் Ally மாடலின் இந்திய விலை மற்றும் விற்பனை விவரங்கள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
அசுஸ் ரோக் Ally மாடலின் Z1 எக்ஸ்டிரீம் வெர்ஷன் விலை ரூ. 69 ஆயிரத்து 990 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை அசுஸ் ஸ்டோர், இ-ஷாப் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இந்த கன்சோலுக்கான ஃபிளாஷ் விற்பனை நடைபெற்றது.
அறிமுக சலுகைகள்:
- அசுஸ் ரோக் Ally மாடலை அசுஸ் இஷாப் அல்லது அசுஸ் எக்ஸ்க்ளூசிவ் ஸ்டோர்களில் ஜூலை 12 முதல் ஜூலௌ 15 ஆம் தேதிக்குள் வாங்கும் முதல் 200 வாடிக்கையாளர்களுக்கு ரூ. 2 ஆயிரம் மதிப்புள்ள ரோக் Ally கேஸ்-ஐ ரூ. 1 மட்டும் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். இதனை பெறுவதற்கு asuspromo.in வலைதளம் செல்ல வேண்டும்.
- இத்துடன் ரூ. 1 லட்சத்து 42 ஆயிரத்து 990 மதிப்புள்ள XG மொபைலினை ரூ. 87 ஆயிரத்து 990 விலையில் வாங்கிட முடியும்.
- வங்கி சார்ந்த கேஷ்பேக் மற்றும் வட்டியில்லா மாத தவணை முறை வசதியும் வழங்கப்படுகிறது. இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி சேவையில் மாத தவணை முறையை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் வரை கூடுதல் கேஷ்பேக் வழங்கப்படுகிறது.
அசுஸ் ரோக் Ally அம்சங்கள்:
7 இன்ச் IPS டிஸ்ப்ளே, Full HD, 1920x1080 பிக்சல் ரெசல்யூஷன்
120Hz ரிப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் விக்டஸ் பாதுகாப்பு
AMD ரைசன் Z1 எக்ஸ்டிரீம் APU
16 ஜிபி LPDDR5 6400MHz ரேம்
512 ஜிபி PCIe 4.0 NVMe M.2 SSD ஸ்டோரேஜ்
விண்டோஸ் 11 ஒஎஸ்
ஸ்டீம், EA ஆப்ஸ், எபிக் கேம்ஸ் மற்றும் எக்ஸ்பாக்ஸ் கேம் பாஸ் சப்போர்ட்
டூயல் ஸ்பீக்கர்
அசுஸ் ஸ்மார்ட் ஆம்ப்லிஃபயர் தொழில்நுட்பம்
3.5mm ஹெட்போன் ஜாக்
யுஎஸ்பி 3.2 ஜென் 2 டைப் சி போர்ட்
ரோக் XG மொபைல் இன்டர்ஃபேஸ், UHS-II மைக்ரோ எஸ்டி கார்டு ரீடர் சப்போர்ட்
40 வாட் ஹவர் பேட்டரி
65 வாட் சார்ஜிங் வசதி