புதிய கேஜெட்டுகள்

மடிக்கக்கூடிய லேப்டாப் அறிமுகம் செய்த அசுஸ்

Published On 2022-11-11 08:21 GMT   |   Update On 2022-11-11 08:21 GMT
  • அசுஸ் நிறுவனத்தின் புதிய மடிக்கக்கூடிய லேப்டாப் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது.
  • புதிய அசுஸ் ஜென்புக் 17 போல்டு உலகின் முதல் 17.3 இன்ச் போல்டபில் OLED லேப்டாப் மாடல் ஆகும்.

அசுஸ் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய லேப்டாப்- ஜென்புக் 17 போல்டு இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. முன்னதாக இந்த லேப்டாப்பிற்கான முன்பதிவு கடந்த மாதம் துவங்கி நடைபெற்று வந்தது. இது உலகின் முதல் 17.3 இன்ச் மடிக்கக்கூடிய OLED லேப்டாப் ஆகும். புதிய போல்டபில் லேப்டாப்-ஐ உருவாக்க பிஒஇ டெக்னாலஜி மற்றும் இண்டெல் நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியதாக அசுஸ் தெரிவித்து இருக்கிறது.

இதில் 17 இன்ச் 2.5K ஸ்கிரீன் உள்ளது. இதனை மடிக்கும் போது 12.5 இன்ச் லேப்டாப் போன்று பயன்படுத்தலாம். அசுஸ் எர்கோசென்ஸ் ப்ளூடுத் கீபோர்டு, டச்பேட் உள்ளிட்டவைகள் அடங்கிய போல்டிங் டிசைன் இருப்பதால், இந்த சாதனத்தை கணினி, லேப்டாப், டேப்லெட், ஆன்-ஸ்கிரீன் கீபோர்டு, புக் மற்றும் எக்ஸ்டெண்ட் என ஏராளமோன மோட்களில் பயன்படுத்த முடியும்.

அசுஸ் ஜென்புக் 17 போல்டு OLED அம்சங்கள்:

17.3 இன்ச் 2560x1920 பிக்சல் FOLED டிஸ்ப்ளே

இண்டெல் கோர் i7 பிராசஸர்

இண்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ்

16 ஜிபி LPDDR5 ரேம்

1 டிபி (1000 ஜிபி) NVMe PCie 4.0 SSD

விண்டோஸ் 11 ஹோம் / ப்ரோ

சாஃப்ட் கீபோர்டு, 1.4mm கீ-டிராவல்

5MP பிரைமரி கேமரா, IR அம்சம்

US MIL-STD 810H ராணுவ தரம்

வைபை 6E, ப்ளூடூத் 5.2, 2x தண்டர்போல்ட் 4

1x 3.5mm காம்போ ஆடியோ ஜாக்

75 வாட் ஹவர் பேட்டரி

யுஎஸ்பி டைப் சி, 65 வாட் ஏசி அடாப்டர்

விலை மற்றும் விற்பனை விவரங்கள்:

புதிய அசுஸ் ஜென்புக் 17 போல்டு OLED மாடலின் விலை ரூ.3 லட்சத்து 29 ஆயிரத்து 990 ஆகும். இதன் விற்பனை ஆன்லைன் மற்றும் ஆப்லைன் தளங்களில் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News