ரூ. 2 ஆயிரம் பட்ஜெட்டில் ப்ளூடூத் காலிங் வசதி கொண்ட ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்
- போட் நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மெட்டல் பாடி கொண்டிருக்கிறது.
- போட் வேவ் எலிவேட் என்று அழைக்கப்படும் ஸ்மார்ட்வாட்ச் ப்ளூடூத் காலிங் வசதியும் கொண்டிருக்கிறது.
போட் நிறுவனம் இந்திய சந்தையில் போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் மாடலை அறிமுகம் செய்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் தோற்றத்தில் ஆப்பிள் வாட்ச் அல்ட்ரா போன்றே காட்சியளிக்கிறது. இந்த வாட்ச் மெட்டாலிக் பாடி, கிரவுன், பல்வேறு நிறங்களில் கிடைக்கும் ஓசன் பேண்ட் ஸ்டிராப் உடன் கிடைக்கிறது.
இதில் 1.96 இன்ச் அளவில் பெரிய HD ஸ்கிரீன், கஸ்டமைஸ் செய்யக்கூடிய வாட்ச் ஃபேஸ்கள் வழங்கப்பட்டு உள்ளன. இத்துடன் ப்ளூடூத் காலிங் வசதி, அதிக தரமுள்ள இன்-பில்ட் மைக், டயல் பேட், காண்டாக்ட்களை ஸ்டோர் செய்து கொள்ளும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.
புதிய போட் வேவ் எலிவேட் மாடலில் உடல்நல விவரங்களை டிராக் செய்யும் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதில் SpO2, ஸ்லீப் மற்றும் 50-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், IP67 தர வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட் வசதி, அதிகபட்சம் ஐந்து நாட்களுக்கு பேட்டரி பேக்கப் வழங்கும் பேட்டரி கொண்டிருக்கிறது.
இந்திய சந்தையில் புதிய போட் வேவ் எலிவேட் ஸ்மார்ட்வாட்ச் கிரே, பிளாக், கிரீன் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் கிடைக்கிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்வாட்ச் ரூ. 2 ஆயிரத்து 299 விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதன் விற்பனை அமேசான் வலைதளத்தில் செப்டம்பர் 6-ம் தேதி துவங்குகிறது.