புதிய கேஜெட்டுகள்

சி.எம்.ஃப். வாட்ச் ப்ரோ சில்வர் எடிஷன் அறிமுகம் - விலை இவ்வளவு தானா?

Published On 2024-01-06 09:43 GMT   |   Update On 2024-01-06 09:43 GMT
  • ஸ்மார்ட்வாட்ச்-இன் சில்வர் எடிஷன் வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்தது.
  • வாட்ச் ப்ரோ சில்வர் எடிஷன் விற்பனை இந்த மாதமே துவங்க இருக்கிறது.

சி.எம்.எஃப். பை நத்திங் பிராண்ட் கடந்த ஆண்டு வாட்ச் ப்ரோ பெயரில் ஸ்மார்ட்வாட்ச்-ஐ அறிமுகம் செய்தது. இந்த வாட்ச் டார்க் கிரே மற்றும் மெட்டாலிக் கிரே என இரண்டு நிறங்களில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தற்போது இந்த பிராண்ட் தனது ஸ்மார்ட்வாட்ச்-இன் சில்வர் எடிஷன் வேரியண்ட்-ஐ அறிமுகம் செய்துள்ளது.

மினிமலிஸ்ட் டிசைன் அடிப்படையில் உருவாகி இருக்கும் சில்வர் எடிஷனில் அலுமினியம் அலாய் வாட்ச் ஃபிரேம் உள்ளது. இத்துடன் லைட் கிரே நிற ஸ்டிரைப்கள் உள்ளன. புதிய எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதால் வாடிக்கையாளர்கள் சில்வர், ஆரஞ்சு, டார்க் கிரே மற்றும் ஆஷ் கிரே போன்ற நிறங்களில் ஒன்றை தேர்வு செய்யும் ஆப்ஷன் கிடைத்திருக்கிறது.

 


இந்திய சந்தையில் சி.எம்.எஃப். வாட்ச் ப்ரோ சில்வர் எடிஷன் விற்பனை இந்த மாதமே துவங்க இருக்கிறது. விற்பனை ப்ளிப்கார்ட், மிந்த்ரா, க்ரோமா, விஜய் சேல்ஸ் மற்றும் ஜெனரல் டிரேட் உள்ளிட்ட தளங்களில் நடைபெற இருக்கிறது. இதன் விலை ரூ. 4 ஆயிரத்து 999 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

அம்சங்களை பொருத்தவரை சி.எம்.எஃப். வாட்ச் ப்ரோ மாடலில் பாலிஷ்டு மெட்டல் ஃபிரேம், பக்கவாட்டில் டயல், பிளாஸ்டிக் பேக் உள்ளது. இத்துடன் 1.96 இன்ச் AMOLED டிஸ்ப்ளே, 24 மணி நேர ஹெல்த் டிராக்கிங், ரியல் டைம் ஹார்ட் ரேட் மற்றும் பிளட் ஆக்சிஜன் சேச்சுரேஷன் மானிட்டரிங், ஸ்லீப் மற்றும் ஸ்டிரெஸ் டிராக்கிங் போன்ற வசதிகள் உள்ளன.

110-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்களை கொண்டிருக்கும் வாட்ச் ப்ரோ மாடல் ப்ளூடூத் காலிங் மற்றும் ஏ.ஐ. தொழில்நுட்பம் கொண்டிருக்கிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் 340 எம்.ஏ.ஹெச். பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. இதனை முழுமையாக சார்ஜ் செய்தால் 13 நாட்களுக்கான பேட்டரி பேக்கப் கிடைக்கிறது. மேலும் IP68 தர வாட்டர் ரெசிஸ்டன்ட் வசதி உள்ளது.

Tags:    

Similar News