புதிய கேஜெட்டுகள்

இணையத்தில் லீக் ஆன பிக்சல் ஃபோல்டு ரெண்டர்

Published On 2022-12-09 07:06 GMT   |   Update On 2022-12-09 07:06 GMT
  • கூகுள் நிறுவனம் உருவாக்கி வரும் புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி வருகிறது.
  • கூகுள் நிறுவனத்தின் முதல் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம்.

கூகுள் நிறுவனம் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பிரிவில் களமிறங்க இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. மேலும் கூகுள் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்களும் தொடர்ந்து இணையத்தில் வெளியாகி வருகின்றன. அந்த வரிசையில், தற்போது பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனின் ரெண்டர்கள் வெளியாகி இருக்கிறது.

புதிய பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் டிசைன் பிக்சல் 7 சீரிஸ் மாடல்களை தழுவியே உருவாக்கப்பட்டு இருக்கும் என தற்போதைய டீசர்களில் தெரியவந்துள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படுகிறது. மேலும் இதன் ஒட்டுமொத்த தோற்றம் ஒப்போ ஃபைண்ட் N போன்றே காட்சியளிக்கிறது.

அளவீடுகளை பொருத்தவரை பிக்சல் ஃபோல்டு மாடல் 158.7 x 139.7 x 5.7mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதன் பின்புறம் 8.3mm அளவில் கேமரா பம்ப் உள்ளது. திறக்கப்பட்ட நிலையில் பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போன் 7.69 இன்ச் அளவில் உள்ளது. இதன் உள்புற டிஸ்ப்ளேவில் தடிமனான பெசல்கள், பன்ச் ஹோல் ரக கேமரா, 5.79 இன்ச் கவர் டிஸ்ப்ளே மற்றும் மத்தியில் பன்ச் ஹோல் ரக செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது.

பிக்சல் ஃபோல்டு ஸ்மார்ட்போனில் டென்சார் G2 பிராசஸர், அதிகபட்சம் 12 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் வழங்கப்படும் என கூறப்படுகிறது. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் சில்வர் மற்றும் பிளாக் நிறங்களில் கிடைக்கும் என தெரிகிறது. இதன் விலை 1799 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 809 வரை நிர்ணயம் செய்யப்படும் என கூறப்படுகிறது. இத்துடன் ஸ்டைலஸ் வசதியும் வழங்கப்படும் என கூறப்படுகிறது.

Photo Courtesy: OnLeaks @ HOWTOISOLVE

Tags:    

Similar News