ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்ட ஹானர் பேட் X9 இந்தியாவில் அறிமுகம்
- ஹானர் நிறுவனத்தின் புதிய டேப்லெட் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த ஒஎஸ் கொண்டிருக்கிறது.
- ஹானர் பேட் X9 மாடல் மொத்தத்தில் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
ஹானர் பிரான்டு இந்திய சந்தையில் ரி என்ட்ரி கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. ஸ்மார்ட்போன்கள் தவிர ஹானர் பிரான்டு லேப்டாப் மற்றும் டேப்லெட் மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வரிசையில், தற்போது ஹானர் பேட் X9 மாடல் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
புதிய டேப்லெட் மாடல் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஹானர் பேட் X8 மாடலை விட மேம்பட்ட அம்சங்களை கொண்டிருக்கும் என்று தெரிகிறது. புதிய ஹானர் பேட் X9 மாடல் ரியல்மி பேட் 2, ஒப்போ பேட் ஏர் போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமைகிறது.
அம்சங்களை பொருத்தவரை ஹானர் பேட் X9 மாடலில் 11.5 இன்ச் டிஸ்ப்ளே, சுற்றிலும் சிமெட்ரிக்கல் பெசல்கள், 2K ரெசல்யூஷன், 400 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 120Hz ரிப்ரெஷ் ரேட், ஹை-ரெஸ் ஆடியோ, மெட்டல் யுனிபாடி, 5MP சென்சார், 5MP செல்பி கேமரா வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட் குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 695 பிராசஸர் கொண்டிருக்கிறது.
இத்துடன் 4 ஜிபி ரேம், 3 ஜிபி வரை விர்ச்சுவல் ரேம், 128 ஜிபி மெமரி, 7250 எம்ஏஹெச் பேட்டரி, 22.5 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. இந்த டேப்லெட்-ஐ முழுமையாக சார்ஜ் செய்தால் 13 மணி நேரத்திற்கு பேக்கப் வழங்குகிறது. ஹானர் பேட் X9 மாடலில் ஆன்ட்ராய்டு 13 சார்ந்த மேஜிக்யுஐ 7.1 ஒஎஸ் வழங்கப்பட்டு இருக்கிறது.
விலை மற்றும் விற்பனை விவரங்கள்:
ஹானர் பேட் X9 மாடலின் 4 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14 ஆயிரத்து 499 என்று நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இது அறிமுக விலை ஆகும். இந்த டேப்லெட் ஸ்பேஸ் கிரே எனும் ஒற்றை நிறத்தில் மட்டுமே கிடைக்கிறது.
இதற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. விற்பனை ஆகஸ்ட் 2-ம் தேதி துவங்க இருக்கிறது. புதிய ஹானர் பேட் X9 மாடலை முன்பதிவு செய்வோருக்கு ரூ. 500 தள்ளுபடி, ஹானர் ப்ளிப் கேஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.