மூன்று விதங்களில் மடிக்கலாம் - புது Foldable போன் உருவாக்கும் ஹூவாய்
- வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.
- மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.
ஹூவாய் நிறுவனம் விரைவில் தனது P70 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு ஏற்கனவே சில முறை தாமதமாகிவிட்டது. இந்த நிலையில், ஹூவாய் நிறுவனம் இந்த ஸ்மார்ட்போன் மட்டுமின்றி வேறுசில சாதனங்களை உருவாக்கி வருவதாகவும் கூறப்படுகிறது.
அந்த வகையில், ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இந்த மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மூன்று நிலைகளில் மடிக்கும் திறன் கொண்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதுதவிர ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி இருப்பதாகவும், இதற்கான பணிகள் முழுமை பெற்றுவிட்டதாகவும் சீன தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஹூவாய் நிறுவனத்தின் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் Z அல்லது S வடிவில் மூன்றாக மடிக்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்கிரீன் அளவு 10 இன்ச் ஆக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
ஹூவாயின் புதிய மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனிற்கு BOE பேனல்களை வினியோகம் செய்யும் என்று கூறப்படுகிறது. இந்த சாதனத்தின் ஹீன்ஜ் (கீல்) ஹௌலி மற்றும் ஃபுஸ்டா போன்ற நிறுவனங்கள் உற்பத்தி செய்வதாக தெரிகிறது. இந்த சாதனத்தை பெரியளவில் விற்பனைக்கு கொண்டு வரும் பணிகளில் ஹூவாய் ஈடுபட்டு வருகிறது.
மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் மட்டுமின்றி ஹூவாய் நிறுவனம் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் ஒன்றை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. இந்த சாதனம் ஹூவாய் விஷன் ப்ரோ என்று அழைக்கப்பட இருக்கிறது. இதில் உள்ள டாப் எண்ட் பிராசஸர் பயனர்களுக்கு அசத்தலான அனுபவத்தை வழங்கும்.
இந்த அணியக்கூடிய சாதனம் அதிநவீன கூலிங் மெக்கானிசம் கொண்டு, பரவலான மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட்கள் ஏற்படுத்தும் வெப்ப உணர்வை தடுக்கும். புதிய மடிக்கக்கூடிய சாதனம் மற்றும் மிக்சட் ரியாலிட்டி ஹெட்செட் தொடர்பாக ஹூவாய் சார்பில் இதுவரை எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.