மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸருடன் அறிமுகமாகும் ஐகூ நியோ 7
- ஐகூ நிறுவனத்தின் புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் வெளியிடப்பட இருக்கிறது.
- புதிய நியோ சீரிஸ் ஸ்மார்ட்போன் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் கொண்டிருக்கிறது.
ஐகூ நிறுவனம் தனது அடுத்த மிட்-ரேன்ஜ் ஸ்மார்ட்போனின் வெளியீட்டை உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த மிட் ரேன்ஜ் ஸ்மார்ட்போன் ஐகூ நியோ சீரிசில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இது ஐகூ நியோ 7 என அழைக்கப்படுகிறது. இது கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட ஐகூ நியோ 6 ஸ்மார்ட்போனின் மேம்பட்ட வேரியண்ட் ஆகும். புதிய ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போனிலும் மூன்று லென்ஸ் அடங்கிய கேமரா பாகம் உள்ளது.
இதன் ஆரஞ்சு நிற வேரியண்டின் பின்புறம் லெதர் போன்ற பினிஷ் செய்யப்பட்டு உள்ளது. ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போன் பிளாக் மற்றும் புளூ என மொத்தம் மூன்று விதமான நிறங்களில் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். புதிய ஐகூ நியோ 7 மாடலில் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படும் என ஐகூ உறுதிப்படுத்தி இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் அக்டோபர் 20 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படுகிறது.
ஏற்கனவே வெளியான தகவல்களின் படி ஐகூ நியோ 7 ஸ்மார்ட்போன் மிட்-ரேன்ஜ் பிரிவில் அறிமுகமாகும் என்றும் இதில் மீடியாடெக் டிமென்சிட்டி 9000 பிளஸ் பிராசஸர் வழங்கப்படும் என கூறப்படுகிறது. முந்தைய ஐகூ நியோ 6 மாடல் சீன சந்தையில் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருந்தது. இதன் இந்திய வேரியண்ட் ஸ்னாப்டிராகன் 870 பிராசஸர் கொண்டிருந்தது.
அம்சங்களை பொருத்தவரை 6.78 இன்ச் FHD+ 120Hz E5 AMOLED ஸ்கிரீன், இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு, 2MP கேமரா மற்றும் 5000 எம்ஏஹெச் பேட்டரி வழங்கப்படும் என தெரிகிறது. இத்துடன் 120 வாட் பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போனின் இதர விவரங்கள் ஒவ்வொன்றாக அறிவிக்கப்படலாம்.