கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆன புது ஸ்மாரட்போன் - ரி-எண்ட்ரி கொடுக்கும் லெனோவோ?
- லெனோவோ நிறுவனம் உருவாக்கி வரும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் வெளியாகி உள்ளது.
- புதிய லெனோவோ K சீரிஸ் ஸ்மார்ட்போன் விவரங்கள் கூகுள் பிளே கன்சோலில் லீக் ஆகி இருக்கிறது.
லெனோவா நிறுவனம் பட்ஜெட் பிரிவில் இரண்டு புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. புதிய லெனோவோ K14 மற்றும் லெனோவோ K14 நோட் ஸ்மார்ட்போன்கள் பட்ஜெட் பிரிவில் அறிமுகமாகும் என தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு புது ஸ்மார்ட்போன்களும் கூகுள் பிளே கன்சோலில் இடம்பெற்று இருக்கிறது. இதில் ஸ்மார்ட்போனின் விவரங்கள் மட்டுமின்றி படங்களும் வெளியாகி உள்ளது.
அதன்படி லெனோவோ K14 நோட் மாடலில் ஃபுல் ஹெச்டி பிளஸ் 2400x1080 பிகர்சல் ஸ்கிரீன், பன்ச் ஹோல் செல்ஃபி கேமரா, 4 ஜிபி ரேம், MT6769 பிராசஸர் வழங்கப்படும் என தெரியவந்துள்ளது. 12 நானோமீட்டர் முறையில் உருவாக்கப்பட்டு மாலி G-52 2EEMC2 GPU கொண்ட மீடியாடெக் ஹீலியோ G70 சிப்செட் தான் MT6769 என குறிப்பிடப்படுகிறது. புதிய லெனோவோ K14 நோட் மாடல் ஆண்ட்ராய்டு 11 கொண்டிருக்கும் நிலையில், தற்போது ஆண்ட்ராய்டு 13 அப்டேட் கொண்டிருக்கிறது.
லெனோவோ K14 மாடலில் V வடிவ நாட்ச், ஸ்கிரீனை சுற்றி தடிமனான எட்ஜ்கள் உள்ளன. இதன் ஸ்கிரீன் HD+ 1200x720 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 2 ஜிபி ரேம், ஆக்டா கோர் யுனிசாக் T606 பிராசஸர், 12 நானோமீட்டர் பிராசஸர், மாலி G57 MP1 GPU வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் ஆண்ட்ராய்டு 11 ஒஎஸ் வழங்கப்படுகிறது.
இரு ஸ்மார்ட்போன்களிலும் சற்றே பழைய அம்சங்கள் கொண்டிருக்கும் நிலையில், இவற்றின் வெளியீடு பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் வரும் வாரங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.