புதிய கேஜெட்டுகள்

இணையத்தில் லீக் ஆன மோட்டோ ஸ்மார்ட்போன் ரெண்டர்கள்!

Published On 2022-12-24 07:26 GMT   |   Update On 2022-12-24 07:26 GMT
  • மோட்டோரோலா நிறுவனத்தின் புதிய E சீரிஸ் ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.
  • மோட்டோரோலா நிறுவனத்தின் E13 ஸ்மார்ட்போன் விவரங்கள் ஏற்கனவே பல்வேறு வலைதளங்களில் லீக் ஆகி இருந்தது.

மோட்டோரோலா நிறுவனம் தனது புதிய எண்ட்ரி லெவல் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் மோட்டோரோலா E13 எனும் பெயரில் விற்பனைக்கு வரும் என கூறப்படுகிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் லீக் ஆகி இருந்தது. விரைவில் அறிமுகமாகும் என கூறப்பட்ட நிலையில், மோட்டோரோலா E13 ஸ்மார்ட்போன் ரெண்டர்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அந்த வகையில் mysmartprice வெளியிட்டு இருக்கும் ரெண்டர்களில் புதி மோட்டோரோலா மோட்டோ E13 ஸ்மார்ட்போன் வாட்டர் டிராப் ரக நாட்ச் டிஸ்ப்ளே கொண்டிருக்கிறது. இதன் கீழ்புறத்தில் தடிமனான சின் பகுதி உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் கோல்டு நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. இதுதவிர மேலும் சில நிறங்களிலும் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்படலாம்.

மோட்டோ E13 பின்புறத்தில் இரண்டு கட்-அவுட்கள் உள்ளன. எனினும், இவற்றின் ஒன்றில் மட்டுமே கேமரா சென்சார் இடம்பெற்று இருக்கிறது. மற்றொன்றில் எல்இடி ஃபிலாஷ்லைட் உள்ளது. ஸ்மார்ட்போன் பின்புறம் இடதுபுற ஓரத்தில் கட்-அவுட்-ஐ சுற்றி செவ்வக பம்ப் காணப்படுகிறது. ரெண்டர்களின் படி புது மோட்டோ E13 ஸ்மார்ட்போன் யுஎஸ்பி டைப் சி போர்ட் கொண்டிருக்கிறது. இதன் அருகிலேயே ஸ்பீக்கர் கிரில் மற்றும் மைக்ரோபோன்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த ஸ்மார்ட்போனின் அம்சங்கள் பற்றி இந்த ரெண்டர்களில் எவ்வித தகவலும் இடம்பெறவில்லை. எனினும், முந்தைய தகவல்களின் படி புதிய மோட்டோ E13 மாடலில் யுனிசாக் T606 பிராசஸர், அதிகபட்சம் 2 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 13 ஒஎஸ் போன்ற அம்சங்கள் வழங்கப்படும் என தெரிகிறது. வரும் நாட்களில் இந்த ஸ்மார்ட்போன் பற்றிய இதர விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

Tags:    

Similar News