புதிய கேஜெட்டுகள்

இந்தியாவின் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யும் போக்கோ

Published On 2024-03-06 15:56 GMT   |   Update On 2024-03-06 15:56 GMT
  • போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.
  • குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும்

போக்கோ நிறுவனம் ஏர்டெல் உடன் கூட்டணி அமைத்து போக்கோ C51 ஸ்மார்ட்போனினை கடந்த ஆண்டு அறிமுகம் செய்தது. தற்போது இந்த கூட்டணியை நீட்டிக்கும் வகையில், ஏர்டெல் சேவையை மட்டும் பயன்படுத்தும் வகையில் புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருக்கிறது.

இதனை போக்கோ இந்தியா தலைவர் ஹிமான்ஷூ டான்டன் எக்ஸ் பதிவின் மூலம் உறுதிப்படுத்தி இருக்கிறார். அதன்படி ஏர்டெல் கூட்டணியில் உருவான புதிய போக்கோ ஸ்மார்ட்போன் விரைவில் அறிமுகமாக இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் போக்கோ நியோ சீரிசில் இடம்பெற்று இருக்குமா அல்லது போக்கோ F6 சீரிசில் வெளியாகுமா என்ற கேள்விக்கு ஹிமான்ஷூ பதில் அளித்துள்ளார்.



அதில், இது ஏற்கனவே விற்பனை செய்யப்படும் ஸ்மார்ட்போனின் ஏர்டெல் வெர்ஷனாக இருக்கும் என்று தெரிவித்து இருக்கிறார். புதிய சாதனம் பற்றி வேறு எந்த தகவலும் குறிப்பிடாமல், அது இந்திய சந்தையில் அறிமுகமாகும் குறைந்த விலை 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும் என்று தெரிவித்தார்.

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி இந்த சாதனம் போக்கோ C சீரிஸ் ஸ்மார்ட்போனில் ஏர்டெல் சேவைகளை மட்டும் பயன்படுத்தும் வகையில் லாக் செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்போன் தவிர போக்கோ இந்தியா நிறுவனம் தனது போக்கோ X6 நியோ ஸ்மார்ட்போனினை இந்திய சந்தையில் அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது அந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்து வரும் போக்கோ X6 மற்றும் போக்கோ X6 ப்ரோ மாடல்களுடன் இணையும். 

Tags:    

Similar News