விரைவில் வெளியீடு - வேற லெவல் டீசர் வெளியிட்ட போக்கோ
- ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படுகிறது.
- இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா வழங்கப்படுகிறது.
போக்கோ நிறுவனத்தின் புதிய X6 நியோ ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு இருக்கிறது. முன்னதாக இந்த ஸ்மார்ட்போனின் டீசர்கள் இணையததில் வெளியிடப்பட்டு வந்த நிலையில், புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 13-ம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பாக போக்கோ இந்தியா அதிகாரப்பூர்வ எக்ஸ் அக்கவுண்டில் பதிவிடப்பட்டு இருக்கிறது. அதில் புதிய ஸ்மார்ட்போன் மார்ச் 13-ம் தேதி மதியம் 12 மணிக்கு இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் ப்ளிப்கார்ட் வலைதளத்தில் விற்பனை செய்யப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
இதுவரை வெளியாகி இருக்கும் டீசர்களின் படி போக்கோ X6 நியோ மாடலில் பெசல் லெஸ் டிசைன், 7.69mm அளவில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் 120Hz AMOLED டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்பு, அதிகபட்சம் 1000 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வழங்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 108MP பிரைமரி கேமரா, 3x லாஸ்லெஸ் இன்-சென்சார் ஜூம் வசதி வழங்கப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போனில் 16MP செல்ஃபி கேமரா, ஆண்ட்ராய்டு 13 சார்ந்த MIUI 14, 5000 எம்.ஏ.ஹெச். பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.