புதிய கேஜெட்டுகள்

கோப்புப்படம் 

24 ஜிபி ரேம் கொண்ட ரியல்மி ஸ்மார்ட்போன் - வெளியீடு எப்போ தெரியுமா?

Published On 2023-06-27 02:51 GMT   |   Update On 2023-06-27 02:51 GMT
  • ரியல்மி நிறுவனம் 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் கொண்ட ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து வருகிறது.
  • அதிக ரேம் அம்சம் ரியல்மி நிறுவனத்தின் பிளாக்ஷிப் GT சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

ரியல்மி நிறுவனம் 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது பற்றிய விவரங்களை சீன டிப்ஸ்டரான டிஜிட்டல் சாட் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கிறார். 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் பற்றிய விவரங்கள் சீன வலைதளமான வெய்போவில் வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஒன்பிளஸ் ஏஸ் 2 ப்ரோ ஸ்மார்ட்போன் 24 ஜிபி ரேம் கொண்ட உலகின் முதல் சாதனம் என்ற பெருமையை பெறும் என கூறப்படுகிறது. ஒன்பிளஸ் மட்டுமின்றி ரியல்மி நிறுவனமும் 24 ஜிபி ரேம் கொண்ட ஸ்மார்ட்போன் மாடலை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருவதாக கூறப்படுகிறது. இத்தகைய ரேம் வசதி ரியல்மி நிறுவனத்தின் பிளாக்ஷிப் GT சீரிஸ் மாடல்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

 

கோப்புப்படம் 

முன்னதாக ரியல்மி நிறுவனம் 16 ஜிபி ரேம், 1 டிபி ஸ்டோரேஜ் வசதிகளை ரியல்மி GT நியோ 5 மாடலில் வழங்கி இருந்தது. இந்த ஸ்மார்ட்போனும் சீன சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர ரியல்மி விற்பனை செய்து வரும் இதர ஸ்மார்ட்போன் மாடல்களில் ரியல்மி யுஐ ஸ்கின் மூலம் விர்ச்சுவல் மெமரி வடிவில் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய ஸ்மார்ட்போன்களில் 24 ஜிபி ரேம் வசதி ஹார்டுவேர் வடிவிலேயே வழங்கப்பட இருக்கிறது. அதிக திறன் கொண்ட ரேம் மாட்யுல்கள் சாம்சங் செமிகன்டக்டர் வினியோகம் செய்யும் என்று தெரிகிறது. இதே நிறுவனம் தான் ஒப்போ, ஒன்பிளஸ் மற்றும் ரியல்மி என மூன்று நிறுவனங்களுக்கும் ரேம் வினியோகம் செய்து வருகிறது.

Tags:    

Similar News