புதிய கேஜெட்டுகள்

ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸருடன் புது ஸ்மார்ட்போன் உருவாக்கும் ரியல்மி

Published On 2022-10-18 05:53 GMT   |   Update On 2022-10-18 05:53 GMT
  • ரியல்மி நிறுவனம் வரும் மாதங்களில் புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது.
  • ரியல்மி நிறுவனம் ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது.

மற்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களை போன்றே ரியல்மி நிறுவனமும் புது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இது குறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் ரியல்மி நிறுவனம் புதிய ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர மற்ற மாடல்களை அறிமுகம் செய்யவும் ரியல்மி திட்டமிட்டு வருகிறது.

டிஜிட்டல் ஸ்டேஷன் வெளியிட்டு இருக்கும் புது தகவல்களில் ரியல்மி நிறுவனம் மிட்-ரேன்ஜ் பிரிவில் புது ஸ்மார்ட்போன் மாடல்களை சீன சந்தையில் அறிமுகம் செய்ய இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன்கள் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 மற்றும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

இரு ஸ்மார்ட்போன்களின் விலை சந்தையில் கடும் போட்டியை ஏற்படுத்தும் வகையில் நிர்ணயம் செய்யப்படும் என தெரிகிறது. இத்துடன் இவற்றில் அதிக ரிப்ரெஷ் ரேட் டிஸ்ப்ளே, பெரிய பேட்டரி, பாஸ்ட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எனினும், புது ரியல்மி ஸ்மார்ட்போன்களின் பெயர் பற்றி இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை.

எனினும், மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர் கொண் ஸ்மார்ட்போன் சீன சந்தையில் ரியல்மி 10 ப்ரோ பிளஸ் பெயரில் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர் கொண்ட ஸ்மார்ட்போன் ரியல்மி ஜிடி நியோ 4 பெயரில் அறிமுகம் செய்யப்படும் என்றும் இதில் 1.5K டிஸ்ப்ளே வழங்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News