புதிய கேஜெட்டுகள்

380 எம்ஏஹெச் பேட்டரியுடன் உருவாகும் ரியல்மி ஸ்மார்ட்வாட்ச்

Published On 2024-06-30 07:23 GMT   |   Update On 2024-06-30 07:23 GMT
  • வாட்ச் S சீரிசின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என தகவல்.
  • புதிய ஸ்மார்ட்வாட்ச் 380 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கலாம்.

ரியல்மி நிறுவனத்தின் முற்றிலும் புதிய ஸ்மார்ட்வாட்ச் மாடல் விரைவில் வெளியாகும் என்று அதிகம் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இந்த ஸ்மார்ட்வாட்ச் அந்நிறுவனம் கடந்த 2020 ஆம் ஆண்டு வெளியிட்ட வாட்ச் S சீரிசின் மேம்பட்ட மாடலாக இருக்கும் என்று தெரிகிறது.

அந்த வகையில் ரியல்மியின் புதிய ஸ்மார்வாட்ச் ரியல்மி வாட்ச் S2 என்ற பெயரில் அறிமுகமாகும் என்று தெரிகிறது. புதிய ஸ்மார்ட்வாட்ச் பற்றிய விவரங்கள் FCC வலைதளத்தில் லீக் ஆகி உள்ளது. அதில் புதிய ஸ்மார்ட்வாட்ச் RMW2401 என்ற மாடல் நம்பர் கொண்டுள்ளது. இதன் FCC ID - 2AUFRMW2401 ஆகும்.

இந்த வலைதள விவரங்களின் படி புதிய ஸ்மார்ட்வாட்ச் 380 எம்.ஏ.ஹெச். பேட்டரி கொண்டிருக்கும் என்று தெரியவந்துள்ளது. இத்துடன் வழங்கப்படும் சார்ஜர் 5 வாட் சார்ஜிங் வசதி கொண்டிருக்கிறது. இந்த சார்ஜர் A152A-090200U-CN1 எனும் மாடல் நம்பர் கொண்டுள்ளது.

புதிய ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் வலது புறத்தில் வட்ட வடிவம் கொண்ட பட்டன் மற்றும் கிரவுன் கொண்டிருக்கிறது. இதன் பின்புறம் சென்சார்கள் வழங்கப்படுகின்றன. தற்போது ரியல்மி ஸ்மார்ட்வாட்ச் விவரங்கள் FCC தளத்தில் லீக் ஆகி இருக்கும் நிலையில், இந்த மாடல் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கலாம். 

Tags:    

Similar News