புதிய கேஜெட்டுகள்
null

ஆப்பிள் M சீரிஸ் பிராசஸர் கொண்ட சாதனங்களிலும் விண்டோஸ் 11 சப்போர்ட்

Published On 2023-02-17 07:03 GMT   |   Update On 2023-02-17 07:47 GMT
  • மேக் சாதனங்களில் விண்டோஸ் ஒஎஸ் பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது.
  • சாதனம் சீராக இயங்க விண்டோஸ் 11 ARM டிரைவர்கள் அவசியம் தேவைப்படும்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ARM-சார்ந்த மேக் மாடல்களில் விண்டோஸ் 11 ஒஎஸ் பயன்படுத்த புதிய வழிமுறையை அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய விவரங்கள் மைக்ரோசாஃப்ட் வலைதளத்தில் இடம்பெற்று இருக்கிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனம் பேரலல்ஸ் டெஸ்க்டாப் 18 கொண்டு விண்டோஸ் 11 ப்ரோ மற்றும் எண்டர்பிரைஸ் ஒஎஸ்-களின் ARM வெர்ஷனை M1 மற்றும் M2 சார்ந்த மேக் சாதனங்களில் பயன்படுத்த அனுமதிக்கிறது.

பணி சூழல் காரணமாக மேக் சாதனங்களில் விண்டோஸ் ஒஎஸ் பயன்படுத்த விரும்புவோருக்கு இது சிறந்த வாய்ப்பாக இருக்கிறது. எனினும், இதில் சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. அனைத்து விதமான ARM விண்டோஸ் பில்டுகளிலும் 32-பிட் மென்பொருள்களின் பயன்பாட்டை மைக்ரோசாஃப்ட் நிறுத்தி வருகிறது. இதனால் 32-பிட் ARM செயலிகளை பயன்படுத்த முடியாது.

 

மேலும் சாதனம் சீராக இயங்க விண்டோஸ் 11 ARM டிரைவர்கள் அவசியம் தேவைப்படும். இத்துடன் ஆண்ட்ராய்டு செயலிகள், லினக்ஸ் சப்-சிஸ்டம் மற்றும் விண்டோஸ் சாண்ட்பாக்ஸ் என மற்றொரு லேயர் விர்ச்சுவலைசேஷன் தேவைப்படும் எதையும் பயன்படுத்த முடியாது. இறுதியில் DirectX 12 அல்லது OpenGL 3.3 கேட்கும் கேம்கள் எதும் வேலை செய்யாது.

முன்னதாக 2021 வாக்கில் ARM மேக் மாடல்களில் விண்டோஸ் 11 பயன்படுத்தும் வசதி வழங்கப்பட்டு இருந்தது. எனினும், இதற்கு பயனர்கள் ஒஎஸ்-இன் இன்சைடர் பிரீவியூவை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் இருந்து வந்தது. தற்போதைய அறிவிப்பின் மூலம் பயனர்கள் விண்டோஸ் 11-ஐ பேரலல்ஸ் டெஸ்க்டாப் 18 மூலம் டவுன்லோட் மற்றும் இன்ஸ்டால் செய்து கொள்ளலாம்.

புதிய மாற்றங்கள் மைக்ரோசாஃப்ட் நிறுவனத்திற்கு எவ்வாறு பாதிப்பாக இருக்கும் என்பது தெளிவற்ற நிலையிலேயே உள்ளது. ஆப்பிள் பூட் கேம்ப் மூலம் இண்டெல் சார்ந்த மேக் மாடல்களில் இருந்ததை போன்ற விண்டோஸ் சப்போர்ட் எதிர்பார்ப்போருக்கு புதிய நடவடிக்கை பயனற்றதாகவே இருக்கும்.

Tags:    

Similar News