அறிந்து கொள்ளுங்கள்
null

அழிந்துபோன தரவுகள்.. தெரியாமல் நடந்துடுச்சுனு சொன்ன கூகுள் - கடைசியில் டுவிஸ்ட்

Published On 2024-05-16 11:36 GMT   |   Update On 2024-05-16 12:31 GMT
  • அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர்.
  • பல பில்லியன் டாலர்கள் இழக்கும் சூழல் உருவானது.

உலகின் முன்னணி தேடுப்பொறி நிறுவனம் கூகுள். உலகளவில் ஏராளமான பயனர்கள் கூகுள் நிறுவன சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். இணையம் சார்ந்து கூகுள் நிறுவனம் ஏராளமான சேவைகளை பயனர்களுக்கு வழங்கி வருகிறது. அவ்வாறு கூகுள் வழங்கி வரும் ஸ்டோரேஜ் சார்ந்த சேவை தான்- கூகுள் கிளவுட்.

கூகுள் கிளவுட் சேவையை கொண்டு பயனர்கள் தங்களின் மிகமுக்கிய தரவுகள் அனைத்தையும் என்க்ரிப்ட் செய்யப்பட்ட வடிவில் மிகவும் பாதுகாப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலம். தெரியாத்தனமாக கிளவுட் சேவையில் ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அந்த சேவையை பயன்படுத்தும் அனைவரும் பாதிக்கப்படுவர். இதே போன்ற சம்பவம் அரங்கேறி இருக்கிறது.

இந்த சம்பவத்தில் ஓய்வூதிய நிதி சேவையை வழங்கி வரும் யூனிசூப்பர் நிறுவன பயனர்கள் சுமார் ஐம்பது லட்சம் பேரின் ஓய்வூதிய நிதி இருப்பு கொண்ட விவரங்கள் தவறுதலாக கூகுள் கிளவுட் சர்வெர்களில் இருந்து அழிக்கப்பட்டு விட்டது. இதை கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தாமஸ் குரியனும் உறுதிப்படுத்தி இருந்தார்.

மேலும், விவரங்கள் தெரியாமல் அவிந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்து இருந்தார். இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவன பயனர்களுக்கு சொந்தமான பல பில்லியன் டாலர்கள் இருப்பு கொண்ட அக்கவுண்ட்கள் பாதிக்கப்பட்டன.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஓய்வூதிய நிதி நிறுவனம் யூனிசூப்பர். இந்நிறுவனத்தின் சேவையை பயன்படுத்தும் சுமார் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான உறுப்பினர்களால் தங்களது ஓய்வூதியை நிதி சார்ந்த அக்கவுண்டை ஒருவார காலத்திற்கு இயக்க முடியாத சூழல் உருவானது. இதனால் பயனர்கள் ஓய்வூதிய நிதி நிலவரத்தை பார்க்க முடியாமலும், சிலரது அக்கவுண்டில் பணம் குறைந்து இருப்பதுமான பிரச்சினைகள் ஏற்பட்டது.

ஓய்வூதிய நிதி சார்ந்த பிரச்சினை தொடர்பாக யூனிசூப்பர் சார்பில் பதில் அளிக்கப்பட்டது. அதில் இந்த பிரச்சினை விரைவில் சரி செய்யப்பட்டு விடும் என்றும் இதற்கான அப்டேட் விரைவில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. இதே தகவலை யூனிசூப்பர் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர் சுன் பாதிக்கப்பட்ட பயனர்களுக்கு மின்னஞ்சல் மூலம் தெரிவித்தார்.

மேலும், இந்த சம்பவத்தில் யூனிசூப்பர் நிறுவனம் தனது தரவுகளை கூகுள் கிளவுட் மட்டுமின்றி மேலும், சில நிறுவனங்களின் சர்வெர்களில் ஸ்டோர் செய்து வைத்திருக்கிறது. இதன் காரணமாக இந்த பிரச்சினையின் பாதிப்புகள் பெருமளவுக்கு குறைந்துள்ளது.

இதுதவிர கூகுள் கிளவுட் தரப்பில் இதுபோன்ற பிரச்சினை எப்படி ஏற்பட்டது என்பதை கண்டறிந்து இருப்பதாகவும், எதிர்காலத்தில் இதுபோன்ற பிரச்சினைகள் ஏற்படாமல் தடுக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாகவும் கூகுள் கிளவுட் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார். 

Tags:    

Similar News