அறிந்து கொள்ளுங்கள்
null

மக்கர் பண்ணும் ஒன் பிளஸ் மொபைல்கள்.. ரிப்பேருக்கு ரூ. 42,000 கேட்கும் சர்வீஸ் சென்டர்கள் - புகார்

Published On 2024-08-27 07:57 GMT   |   Update On 2024-08-27 07:58 GMT
  • தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
  • ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது

 இந்தியாவில் பிரபல மொபைல் போன் பிராண்ட் ஆக விளங்கும் ஒன்பிளஸ் நிறுவனத்தின் மீது சமீப காலமாக குற்றச்சாட்டுகள் குவிந்து வருகின்றன. குறிப்பாக ஒன் பிளஸ் 9 மற்றும் ஒன் பிளஸ் 10 ஆகிய பழைய பிளாக்ஷிப் வேரியண்ட்களை பயன்படுத்துவோர் தங்களது மொபைல்களில் மதர்போர்டு [motherboard] செயலிழந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

 

இதனால் போன்கள் திடீரென எந்த இயக்கமும் ரெஸ்பான்ஸும் இல்லாமல் திரை கருப்பாக மாறி விடுவதாக கூறியுள்ளனர். போன் லேக் ஆவதும் அதிக சூடாவதுமாக இருக்கிறது என்றும் பலர் தங்களது சமூக வலைத்தள பக்கங்களில் புகார்களை அடுக்கி வருகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் சமீபத்திய சாப்வேர் அப்டேட் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னரே நடக்கிறது என்ற கருத்தும் நிலவுகிறது

இந்த நிலையில்தான், பழுதுபட்ட தங்களது ஒன் பிளஸ் 9 ப்ரோ, ஒன்பிளஸ் 10 ப்ரோ மொபைல் போன்களை சரி செய்ய சர்வீஸ் சென்டர்கள் ரூ. 42,000 வரை கேட்பதாக பயனர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த தொகை அந்த மொபைல்களின் விலையை விட அதிகம் ஆகும்.

இந்த மாடல்களை விட மேம்பட்ட ஒன் பிளஸ் 10 ப்ரோ 5ஜி மொபைல் ஆன்லனில் 44 ,000 ரூபாய்க்கு விற்கப்படும் நிலையில் பழைய மாடல் போன்களின் ரிப்பேர் செலவுக்கே 42,000 ஆயிரம் ருபாய் ஆகும் என்று சர்வீஸ் சென்டர்கள் கூறுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு பலரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Tags:    

Similar News