அறிந்து கொள்ளுங்கள்
திடீரென முடங்கிய பிளே ஸ்டேஷன் நெட்வொர்க்.. உலகளவில் கேமர்கள் அவதி
- பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் இன்று உலகளவில் முடங்கி போனது.
- சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4, 5 மற்றும் அதற்கும் முன் வந்த மாடல்களில் இதனால் பாதிப்பு ஏற்பட்டது.
பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் இன்று உலகளவில் முடங்கி போனது. சோனி நிறுவனத்தின் பிளே ஸ்டேஷன் 4, 5 மற்றும் அதற்கும் முன் வந்த மாடல்களில் இதனால் பாதிப்பு ஏற்பட்டது. நெட்வொர்க் முடங்கிய காரணத்தால் உலகளவில் உள்ள மக்களால் பிளே ஸ்டேஷனில் விளையாட முடியாத சூழல் ஏற்பட்டது.
சோனியின் பிளே ஸ்டேஷன் நெட்வொர்க் முடங்கியதை அடுத்து, பலரும் அவர்களது இணைய பக்கத்தில் பதிவிட்டனர். இதற்கு பதிலளித்த சோனி நிறுவனம், "நெட்வொர்க் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனால் நீங்கள் கேம், ஆப்ஸ் போன்றவற்றை பிளே ஸ்டேஷனில் இயக்குவதில் சிக்கல் ஏற்படலாம்."
"எங்களது தொழில்நுட்ப குழு கூடிய விரைவில் இதை சரி செய்வதற்கான வேலைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன," என கூறியுள்ளது. இதனால் பிளே ஸ்டேஷன் உபயோகிக்கும் பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர்.