அறிந்து கொள்ளுங்கள்

இனி வாட்ஸ்அப்-லயே பார்த்துக்கலாம்.. விரைவில் புது அப்டேட்..!

Published On 2024-08-22 16:08 GMT   |   Update On 2024-08-22 16:08 GMT
  • வாட்ஸ்அப் செயலி உலகளவில் கோடிக்கணக்கான பயனர்களை கொண்டுள்ளது.
  • பயனர் தேவையை பூர்த்தி செய்ய வாட்ஸ்அப் அடிக்கடி புது அம்சங்களை வழங்குகிறது.

உலகின் முன்னணி குறுந்தகவல் செயலி வாட்ஸ்அப். உலகளவில் பல கோடி பேர் பயன்படுத்தி வரும் தகவல் பரிமாற்ற செயலியாக வாட்ஸ்அப் உள்ளது. இந்த செயலியில் பயனர்களுக்கு பயன்தரும் வகையில், அடிக்கடி புது அம்சங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில், வாடிக்கையாளர்கள் நீண்ட நாள் எதிர்பார்த்து காத்திருந்த அம்சம் விரைவில் வழங்க வாட்ஸ்அப் முடிவு செய்துள்ளது. இதற்காக வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் புதிய அப்டேட் வெளியிட உள்ளது.

இந்த அப்டேட், ஆங்கிலம் மொழியில் குரல் பதிவாக அனுப்பப்படும் குறுந்தகவல்களை அதே மொழியில் எழுத்து வடிவமாக மாற்றும் வசதியை வழங்குகிறது. இதன் மூலம் பயனர்கள் இனி மூன்றாம் தரப்பு செயலிகளை பயன்படுத்தி குரல் பதிவுகளை எழுத்து வடிவில் மாற்ற வேண்டிய அவசியம் இருக்காது.

முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு வெர்ஷனில் இந்த அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. இந்தியாவில் இந்த அம்சம் ஆங்கிலம் மட்டுமின்றி பல்வேறு மொழிகளில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Tags:    

Similar News