அறிந்து கொள்ளுங்கள்
null

2025-க்குள் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் ஆப்பிள் நிறுவனம்

Published On 2024-08-28 07:17 GMT   |   Update On 2024-08-28 09:30 GMT
  • இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும்.
  • எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது.

2025-ம் நிதியாண்டின் இறுதிக்குள் ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் 6 லட்சம் வேலைவாய்ப்புகளை உருவாக்க இருக்கிறது. ஐபோன் தயாரிப்பாளரின் அதிகரித்து வரும் செயல்பாடுகள் அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியுள்ளன என்று அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்ட ஆதாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆப்பிள் நிறுவனம் பகிர்ந்துள்ள மதிப்பீடுகளின்படி, இந்தியாவில் ஆப்பிளின் நேரடி பணியாளர்களின் எண்ணிக்கை மார்ச் 2025-க்குள் 2,00,000-ஐ எட்டும். இந்த பணிகளில் 70 சதவீதம் பெண்களே உள்ளனர்.

நிறுவனத்தின் மூன்று பெரிய ஒப்பந்த உற்பத்தியாளர்களான ஃபாக்ஸ்கான், விஸ்ட்ரான் மற்றும் பெகாட்ரான் ஆகியவை ஏற்கனவே 80,872 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளன.

கூடுதலாக டாடா குரூப் (Tata Group), சால்காம்ப் (Salcomp), மதர்ஸ்சன் (Motherson), பாக்ஸ்லிங்க் (Foxlink), சன்வோடா (Sunwoda), ஏடிஎல் (ATL) மற்றும் ஜபில் (Jabil) போன்ற சப்ளையர்கள் கூட்டாக 84,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர்.

2020-ம் ஆண்டில் ஸ்மார்ட்போன் உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தை அறிமுகப்படுத்தியதில் இருந்து, ஆப்பிள் மற்றும் அதன் கூட்டாளர்கள் சுமார் 1,65,000 நேரடி வேலைகளை உருவாக்கியுள்ளனர் என்று மற்றொரு அதிகாரி தெரிவித்தார்.

PLI திட்டம், ஆரம்பத்தில் ஐந்து ஆண்டுகளில் 2,00,000 வேலைகளை இலக்காகக் கொண்டது. இந்த இலக்கை நான்கே ஆண்டுகளில் எட்டியுள்ளது. இது இந்தியாவில் வேலை உருவாக்கத்தில் ஆப்பிள் நிறுவனத்தின் குறிப்பிடத்தக்க பங்கை பிரதிபலிக்கிறது.

எலக்ட்ரானிக்ஸ் துறையில் ஒவ்வொரு நேரடி வேலையும் மூன்று மறைமுக வேலைகளை உருவாக்குகிறது என்று அரசாங்கம் மதிப்பிட்டுள்ளது. இது ஆப்பிளின் விரிவாக்கம் 2025 நிதியாண்டு இறுதிக்குள் 5,00,000 முதல் 6,00,000 மொத்த வேலைகளை உருவாக்கக்கூடும் என்று கூறுகிறது.

Tags:    

Similar News