அறிந்து கொள்ளுங்கள்

கீக்பென்ச் தளத்தில் லீக் ஆன பிக்சல் ஃபோல்டு - விரைவில் வெளியீடு?

Published On 2022-12-06 06:57 GMT   |   Update On 2022-12-06 06:57 GMT
  • கூகுள் நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போன் விவரங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன.
  • கடந்த சில ஆண்டுகளாகவே கூகுள் மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருவதாக கூறப்பட்டு வருகிறது.

கூகுள் நிறுவனத்தன் பிக்சல் ஃபோல்டு வெளியீடு விரைவில் நடைபெறும் என எதிர்பார்க்கலாம். கூகுள் ஃபெலிக்ஸ் (Felix) எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் விவரங்கள் கீக்பென்ச் தளத்தில் வெளியாகி உள்ளது. இதன் மூலம் புதிய கூகுள் ஸ்மார்ட்போன் அடுத்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டு விடும் என தெரிகிறது. தற்போது இந்த மாடலின் டெஸ்டிங் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

ஃபெலிக்ஸ் எனும் குறியீட்டு பெயர் கொண்ட ஸ்மார்ட்போன் பிக்சல் 7 ப்ரோ பெயரிலும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது. புதிய பிக்சல் ஃபோல்டு மற்றும் பிக்சல் 7 ப்ரோ என இரு மாடல்களிலும் டென்சார் G2 பிராசஸர் மற்றும் 12 ஜிபி ரேம் வழங்கப்படும் என கூறப்பட்டு வருகிறது. கீக்பென்ச் புள்ளிகளின் படி புது ஸ்மார்ட்போன் அம்சங்கள் பிக்சல் 7 ப்ரோ மாடலில் உள்ளதை போன்றே வழங்கப்பட்டு இருக்கிறது.

கூகுள் பிக்சல் ஃபோல்டு மாடல் தோற்றத்தில் பிக்சல் 7 ப்ரோ போன்றே காட்சியளிக்கும் என தெரிகிறது. இதில் டூயல் கிளாஸ் பேனல்கள், ஸ்டீல் ஃபிரேம் உள்ளது. இத்துடன் மூன்று கேமரா சென்சார்கள் வழங்கப்படலாம். பிக்சல் ஃபோல்டு மாடலில் 8 இன்ச் உள்புற டிஸ்ப்ளே, 6.19 இனஅச் கவர் டிஸ்ப்ளே, 120Hz ரிப்ரெஷ் ரேட் வழங்கப்படுகிறது. இத்துடன் 9.5MP செல்ஃபி கேமரா வழங்கப்படலாம்.

கூகுள் நிறுவனத்தின் பிக்சல் ஃபோல்டு மடிக்கக்கூடிய ஸ்மார்ட்போனின் விலை 1800 டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1 லட்சத்து 47 ஆயிரத்து 410 என நிர்ணயம் செய்யப்படலாம். தற்போதைய தகவல்களின் படி இந்த ஸ்மார்ட்போனின் வெளியீடு அடுத்த ஆண்டு மே மாத வாக்கில் நடைபெற இருக்கும் கூகுள் I/O நிகழ்வில் நடைபெறும் என கூறப்படுகிறது.

Tags:    

Similar News