அறிந்து கொள்ளுங்கள்

புதிய 10 சீரிஸ் வெளியீடு பற்றி சூப்பர் அப்டேட் கொடுத்த ரியல்மி

Published On 2022-10-28 07:39 GMT   |   Update On 2022-10-28 07:39 GMT
  • ரியல்மி நிறுவனம் விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் புது ஸ்மார்ட்போன் விவரங்கள் இணையத்தில் வெளியாகி உள்ளது.
  • ரியல்மி குளோபல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் புது ரியல்மி போன் வெளியீடு பற்றிய தகவல் இடம்பெற்றுள்ளது.

ரியல்மி நிறுவனம் பல்வேறு புது ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போனாக ரியல்மி 10 சீரிஸ் உள்ளது. ரியல்மி குளோபல் அதிகாரப்பூர்வ ட்விட்டர் அக்கவுண்டில் புதிய ரியல்மி 10 சீரிஸ் வெளியீடு நவம்பர் மாத வாக்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய 10 சீரிசில் ஏராளமான சாதனங்களை அறிமுகம் செய்ய ரியல்மி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இவற்றில் வென்னிலா வேரியண்ட், ரியல்மி 10 ப்ரோ, ரியல்மி 10 ப்ரோ பிளஸ் போன்ற மாடல்கள் இடம்பெறும் என கூறப்படுகிறது. இத்துடன் இந்தியா போன்ற நாடுகளில் ரியல்மி 10 4ஜி வேரியண்ட் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம். எனினும், இதுபற்றி ரியல்மி எந்த தகவலும் வெளியிடவில்லை.

புது சாதனம் அறிமுகமாவதை உணர்த்தும் வகையில் ரியல்மி நிறுவன துணை தலைவர் மாதவ் சேத் மூன்று படங்களை பகிர்ந்து இருந்தார். இத்துடன் "மூன்று முக்கிய லீப்-ஃபார்வேர்டு தொழில்நுட்பங்கள்" என அவர் குறிப்பிட்டு இருக்கிறார். இதன் காரணமாக ரியல்மி 10 சீரிசில் குறிப்பிடத்தக்க அப்கிரேடு வழங்கப்படும் என எதிர்பார்க்கலாம். இவரின் ட்விட்டர் பதிவுக்கு பதில் அளித்த ரியல்மி குளோபல் இவை நவம்பர் மாதம் அறிமுகமாகும் என தெரிவித்து இருந்தது.

அதில், "புதிய ரியல்மி நம்பர் சீரிஸ் நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்படும்" என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இத்துடன் #realme10Series எனும் ஹேஷ்டேக் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இதன் காரணமாக ரியல்மி நிறுவனம் விரைவில் புதிய ரியல்மி 10 ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கலாம். ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் பற்றிய தகவல்கள் பலமுறை இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

அந்த வகையில், இதுவரை வெளியான தகவல்களின் படி புதிய ரியல்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் குறைந்த பட்சம் ரியல்மி 10 ப்ரோ அல்லது ரியல்மி 10 ப்ரோ பிளஸ் மாடல்களில் மீடியாடெக் டிமென்சிட்டி 1080 பிராசஸர், அதிகபட்சம் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி வழங்கப்படலாம்.

Tags:    

Similar News