அறிந்து கொள்ளுங்கள்
null

பத்து நிமிடங்களில் முழு சார்ஜ் - 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வீடியோ வெளியிட்ட ரியல்மி

Published On 2023-02-21 07:19 GMT   |   Update On 2023-02-21 07:21 GMT
  • ரியல்மி நிறுவனம் தனது அதிவேக 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வீடியோவை வெளியிட்டு உள்ளது.
  • வீடியோவின் படி ஸ்மார்ட்போன் 9 நிமிடங்கள் 37 நொடிகளில் முழு சார்ஜ் ஆகிவிடுகிறது.

ரியல்மி நிறுவனம் தனது புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போனை MWC 2023 நிகழ்வில் அறிமுகம் செய்ய இருக்கிறது. பிப்ரவரி 28 ஆம் தேதி நடைபெற இருக்கும் MWC 2023 நிகழ்வில் அறிமுகமாகும் ரியல்மி GT 3 மாடல் அந்நிறுவனம் சமீபத்தில் அறிவித்த ரியல்மி GT நியோ 5 மாடலின் சர்வதேச வெர்ஷனாக இருக்கும் என தெரிகிறது.

புதிய ஸ்மார்ட்போனிற்காக ரியல்மி விளம்பர வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி ரியல்மி GT 3 மாடலில் 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படுகிறது. இது ஸ்மார்ட்போனினை 1 இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் செய்ய பத்து நிமிடங்களுக்கும் குறைவாக எடுத்துக் கொள்வது அம்பலமாகி இருக்கிறது.

ஆய்வக சூழலில் ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் 1 இல் இருந்து 100 சதவீதம் வரை சார்ஜ் ஆக வெறும் 9 நிமிடங்கள் 37 நொடிகளை எடுத்துக் கொள்கிறது. இந்த ஸ்மார்ட்போன் 20 சதவீதம் வரை சார்ஜ் ஆக 80 நொடிகளையே எடுத்துக் கொள்கிறது. நான்கு நிமிடங்களில் பேட்டரி 50 சதவீதம் வரை சார்ஜ் ஆகிவிடும். ரியல்மி GT 3 மாடலில் 240 வாட் சார்ஜிங் வழங்கப்படுகிறது. எனினும், ரியல்மி GT நியோ 5 மாடலில் 150 ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு இருக்கிறது.

 

ரியல்மி GT 3 எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்:

இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களின் படி ரியல்மி GT 3 மாடலில் 6.74 இன்ச் 1.5K 144Hz ரிப்ரெஷ் ரேட் கொண்ட AMOLED டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 பிளஸ் ஜென் 1 பிராசஸர், அதிகபட்சம் 16 ஜிபி ரேம், 512 ஜிபி மெமரி வழங்கப்படுகிறது இத்துடன் ஆண்ட்ராய்டு 13 சார்ந்த ரியல்மி யுஐ 4.0 வழங்கப்படும் என தெரிகிறது.

புகைப்படங்களை எடுக்க ரியல்மி GT 3 மாடலில் 50MP பிரைமரி கேமரா, 8MP அல்ட்ரா வைடு கேமரா, 2MP டெப்த் கேமரா, 16MP செல்ஃபி கேமரா வழங்கப்படுகிறது. புதிய ரியல்மி GT 3 ஸ்மார்ட்போன் - 4500 எம்ஏஹெச் பேட்டரி, 240 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங், 5000 எம்ஏஹெச் பேட்டரி மற்றும் 150 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி என இரண்டு வித பேட்டரி ஆப்ஷன்களில் கிடைக்கும் என தெரிகிறது.

Tags:    

Similar News