அறிந்து கொள்ளுங்கள்
null

பெரும் தொல்லை இனி இல்லை.. வாட்ஸ்அப்-இல் வெளியான சூப்பர் அப்டேட்..!

Published On 2023-07-19 06:22 GMT   |   Update On 2023-07-19 07:27 GMT
  • அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும்.
  • வியாபார ரீதியில் வாட்ஸ்அப்-ஐ சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும்.

மெட்டா நிறுவனத்தின் முன்னணி செயலியாக வாட்ஸ்அப் இருக்கிறது. அவ்வப்போது புதிய அம்சங்களை வழங்கி வரும் வாட்ஸ்அப், தற்போது கான்டாக்ட்களை சேவ் செய்யாமலும் குறுந்தகவல் அனுப்பும் வசதியை வழங்கி இருக்கிறது.

இது குறித்து Wabetainfo வெளியிட்டு இருக்கும் தகவல்களில் பயனர்கள் புதிய நம்பர்களுக்கு குறுந்தகவல் அனுப்ப நேரிட்டால், அந்த நம்பரை சேவ் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இதன் மூலம் பயனர்கள் குறுந்தகவல் அனுப்ப வேண்டிய அனைத்து நம்பர்களையும் சேமிக்க வேண்டிய அவசியம் இருக்காது. வாட்ஸ்அப் ஐஒஎஸ் மற்றும் ஆண்ட்ராய்டு வெர்ஷன்களை அப்டேட் செய்த பயனர்களுக்கு இந்த அம்சம் வழங்கப்பட்டு இருக்கிறது.

 

இந்த அம்சத்தை பயன்படுத்த, வாட்ஸ்அப்-இல் ஸ்டார்ட் நியூ சாட் பட்டனை க்ளிக் செய்ய வேண்டும். அடுத்து சர்ச் பாரில் மொபைல் நம்பரை பதிவிட வேண்டும். இவ்வாறு செய்யும் போது, நம்பர் உங்களது பட்டியலில் இருக்கிறதா இல்லையா என்பதை வாட்ஸ்அப் தேடும். அதன்பிறகு கான்டாக்ட் லிஸ்ட் வெளியிலும் தேடும்.

தற்காலிகமாக அறிமுகமில்லா நபர்களுக்கு வாட்ஸ்அப் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், பயனர்கள் முன்னதாக அந்த நம்பர்களை மொபைலில் சேவ் செய்தால் மட்டுமே குறுந்தகவல் அனுப்ப முடியும். ஆனால், புதிய வசதி மூலம் பயனர்கள் மொபைல் நம்பர்களை சேவ் செய்யாமலும், குறுந்தவல் அனுப்பிடலாம்.

வியாபார ரீதியில் தகவல் பரிமாற்றத்திற்கு வாட்ஸ்அப்-ஐ அதிகம் சார்ந்து இருப்பவர்களுக்கு புதிய அம்சம் அதிக பயனுள்ளதாக இருக்கும். இது பீட்டா பயனர்கள் மட்டுமின்றி, அனைவருக்குமான ஸ்டேபில் வெர்ஷனிலேயே வழங்கப்பட்டு இருக்கிறது. அந்த வகையில், பயனர்கள் வாட்ஸ்அப்-இன் சமீபத்திய வெர்ஷனுக்கு அப்டேட் செய்து, புதிய அம்சத்தை பயன்படுத்தலாம். 

Tags:    

Similar News