அறிந்து கொள்ளுங்கள்

2 மணி நேரம் - வாட்ஸ்அப் முடங்கியதற்கான காரணம் தெரியுமா?

Published On 2022-10-26 09:19 GMT   |   Update On 2022-10-26 09:19 GMT
  • உலகின் முன்னணி குறுந்தகவல் செயலிகளில் ஒன்றாக மெட்டா நிறுவனத்தின் வாட்ஸ்அப் விளங்குகிறது.
  • இந்தியா மட்டுமின்றி உலகளவில் வாட்ஸ்அப் சேவை நீண்ட நேரம் முடங்கிய சம்பவம் அரங்கேறியது.

இந்தியாவில் வாட்ஸ்அப் சேவை நேற்று (அக்டோபர் 25) மதியம் முடங்கியது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக முடங்கிய வாட்ஸ்அப் சேவை இரண்டு மணி நேரம் கழித்து மீண்டும் செயல்பாட்டு வந்தது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் வாட்ஸ்அப் சேவை முடங்கி போனது. இந்த செயலி சுமார் இரண்டு மணி நேரம் முடங்கி போனது.

வாட்ஸ்அப் வரலாற்றில் இத்தனை மணி நேரம் செயலி முடங்கியது இதுவே முதல் முறை ஆகும். சேவை முடங்கியதால் பயனர்களால் புகைப்படம், வீடியோ, குறுந்தகவல் உள்ளிட்டவைகளை வாட்ஸ்அப்-இல் அனுப்பவோ, பெறவோ முடியாத சூழல் ஏற்பட்டது. இது குறித்து டவுன்டிடெக்டர் வெளியிட்டு இருக்கும் தகவல்களில் நாடு முழுக்க சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாட்ஸ்அப் சேவையை இயக்க முடியாத சூழல் ஏற்பட்டது.

திடீரென முடங்கிய நிலையில், வாட்ஸ்அப் சேவைகள் மதியம் 2 மணி அளவில் மீண்டும் செயல்பாட்டுக்கு வந்தது. எனினும், செயலியில் அவ்வப்போது சில இடர்பாடுகள் ஏற்பட்டதாக பயனர்கள் குற்றம்சாட்டினர். இதைத் தொடர்ந்தே வாட்ஸ்அப் மீண்டும் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்தது.

முந்தைய தகவல்களில் வாட்ஸ்அப் சர்வெர்களில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக சேவை முடங்கி இருக்கலாம் என கூறப்பட்டது. எனினும், வாட்ஸ்அப் சேவை தொழில்நுட்ப குறைபாடு காரணமாக முடங்கியது என மெட்டா நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News