என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
கிரிக்கெட் (Cricket)
சர்ச்சையான கெமரூன் கிரீனின் கேட்ச்- "மோசடி" என்று கூச்சலிட்ட இந்திய ரசிகர்கள்
- கில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார்.
- இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா - ஆஸ்திரேலியா மோதி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 469 ரன்கள் குவித்தது.
இதையடுத்து களமிறங்கிய இந்தியா 296 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து 2வது இன்னிங்சில் ஆடிய ஆஸ்திரேலியா 8 விக்கெட் இழப்பிற்கு 270 ரன்கள் எடுத்திருந்தபோது டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 444 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் இந்தியா நேற்று களமிறங்கியது.
தொடக்க வீரர்களாக சுப்மன் கில், ரோகித் சர்மா களமிறங்கினர். கில் 18 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கேட்ச் மூலம் அவுட் ஆனார். போலன்ட் பந்துவீச்சில் கெமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து கில் அவுட் ஆனார். ஆனால், கிரீன் பிடித்த கேட்ச் சர்ச்சைக்குள்ளானது. பந்து தரையில் பட்டது போல இருந்தது. அதேவேளை, பந்து தரையில் படுவதற்குள் கிரீனின் கைவிரல் பந்திற்கு மேல் இருந்தது போலும் காட்சியளித்தது. இதன் காரணமாக 3ம் நடுவர் அவுட் கொடுத்தார். இந்த முடிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து மைதானத்தில் இருந்த இந்திய ரசிகர்கள் கிரீன் நோக்கியும், ஆஸ்திரேலிய வீரர்கள் நோக்கியும் 'மோசடி... மோசடி... மோசடி' என கூச்சலிட்டனர். இதனால் மைதானத்தில் சற்று பரபரப்பு ஏற்பட்டது.
இறுதியில் 4ம் நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா 3 விக்கெட் இழப்பிற்கு 164 ரன்கள் சேர்த்துள்ளது. விராட் கோலி 44 ரன்களுடனும், ரஹானே 20 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இன்று (5-ம் நாள்) ஆட்டத்தின் இறுதிநாள் என்ற நிலையில் இந்தியா வெற்றிபெற இன்னும் 280 ரன்கள் தேவைப்படுகிறது. அதேவேளை ஆஸ்திரேலியா வெற்றிபெற இன்னும் 7 விக்கெட்டுகள் வீழ்த்த வேண்டும். இதனால் இன்றைய கடைசி நாள் ஆட்டத்திற்கு பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்