search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    முகிலேஷ் அதிரடி - திண்டுக்கல் வெற்றிபெற 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை
    X

    பவுண்டரிக்கு பந்தை விளாசிய சுரேஷ் குமார்

    முகிலேஷ் அதிரடி - திண்டுக்கல் வெற்றிபெற 189 ரன்களை இலக்காக நிர்ணயித்தது கோவை

    • லைகா கோவை கிங்ஸ் பவர் பிளேயில் விக்கெட் இழப்பின்றி 47 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய முகிலேஷ் 25 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 49 ரன்னில் வெளியேறினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லை சங்கர் நகர் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் திண்டுக்கல் டிராகன்ஸ், லைகா கோவை கிங்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, லைகா கோவை கிங்ஸ் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான கங்கா ஸ்ரீதர் ராஜு, சுரேஷ் குமார் சிறப்பான தொடக்கம் கொடுத்தனர்.

    அணியின் எண்ணிக்கை 67 ஆக இருக்கும்போது சுரேஷ் குமார் 37 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து கங்கா ஸ்ரீதர் ராஜு 33 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய சாய் சுதர்சன் 5 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய ஷிஜித் சந்திரன், முகிலேஷ் அதிரடியாக ஆடினர். இந்த ஜோடி 4வது விக்கெட்டுக்கு 78 ரன்கள் சேர்த்தது. ஷிஜித் 30 ரன்னில் அவுட்டானார்.

    முகிலேஷ் 25 பந்தில் 4 சிக்சர், 3 பவுண்டரி உள்பட 49 ரன்னில் வெளியேறினார்.

    இறுதியில், கோவை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 188 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 189 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×