search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    நியூசிலாந்துக்கு எதிரான  முதல் டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து
    X

    நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் - வெற்றியின் விளிம்பில் இங்கிலாந்து

    • இங்கிலாந்து 2வது இன்னிங்சில் 374 ரன்கள் எடுத்தது.
    • நியூசிலாந்து 63 ரன்களுக்கு 5 விக்கெட் இழந்து தடுமாறி வருகிறது.

    மவுண்ட் மாவ்கனி:

    இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற நியூசிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய இங்கிலாந்து 58.2 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 325 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. ஹாரி புரூக் 89 ரன்னும், டெக்க்ட் 84 ரன்னும் எடுத்தனர். ஒல்லி போப் 42 ரன்னும், போக்ஸ் 38 ரன்னும் எடுத்தனர்.

    நியூசிலாந்து சார்பில் நீல் வாக்னர் 4 விக்கெட்டும், சபுத்தி, குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    தொடர்ந்து ஆடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 306 ரன்களில் ஆல் அவுட்டானது. டாம் பிளெண்டல் சதமடித்து, அவர் 138 ரன்னிலும், கான்வே 77 ரன்னிலும் அவுட்டாகினர்.

    இங்கிலாந்து சார்பில் ஒல்லி ராபின்சன் 4 விக்கெட்டும், ஜேம்ஸ் ஆண்டர்சன் 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 19 ரன்கள் முன்னிலையுடன் இங்கிலாந்து 2வது இன்னிங்சை விளையாடியது. ரூட், ஹாரி புரூக் மற்றும் பென் போக்ஸ் ஆகியோர் அரை சதமடித்தனர். ரூட் 57 ரன்னிலும், ஹாரி புரூக் 54 ரன்னிலும், பென் போக்ஸ் 51 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் ஒரு ரன்னில் அரை சதம் தவறவிட்டார்.

    நியூசிலாந்து சார்பில் டிக்னர், பிரேஸ்வெல் தலா 3 விக்கெட்டும், நீல் வாக்னர், குஜ்ஜிலி தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    394 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி இரண்டாவது இன்னிங்சில் களமிறங்கியது. முன்னணி வீரர்களை

    ஸ்டூவர்ட் பிராட் விரைவில் வெளியேற்றினார்.

    இறுதியில், மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து 5 விக்கெட்டுக்கு 63 ரன்கள் எடுத்து திணறி வருகிறது.

    இன்னும் 2 நாட்கள் இருக்கும் நிலையில், இங்கிலாந்து மீதமுள்ள 5 விக்கெட்களை கைப்பற்றி எளிதில் வெற்றி பெறும் என

    ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

    Next Story
    ×