search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    இந்திய அணியின் வெற்றி மக்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது- பிசிசிஐ புகழாரம்
    X

    இந்திய அணியின் வெற்றி மக்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது- பிசிசிஐ புகழாரம்

    • இந்திய அணி 50 ஓவர் முடிவிங் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தனர்.
    • பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.
    16-வது ஆசிய கோப்பை கிரிக்கெட்டில் தற்போது சூப்பர்4 சுற்று ஆட்டங்கள் இலங்கை தலைநகர் கொழும்பில் நடந்து வருகிறது.

    சூப்பர்4 சுற்றின் 3-வது ஆட்டத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் நேற்று பலப்பரீட்சையில் நடத்தின. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது.

    இந்திய அணி பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களா விளையாடிய ரோகித் சர்மாவும், சுப்மன் கில்லும் முறையே 56 மற்றும் 58 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

    இவர்களை அடுத்து விராட் கோலியும், கே.எல்.ராகுலும் சதம் அடித்து விளாசினர். இதன்மூலம் இந்திய அணி 50ஓவர் முடிவிங் வெறும் 2 விக்கெட் இழப்பிற்கு 356 ரன்களை குவித்தனர்.

    இதையடுத்து, 357 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி விளையாட தொடங்கியது.

    பாகிஸ்தான் அணியில் அடுத்தடுத்து விழுந்த விக்கெட்டால், பாகிஸ்தான் அணி 32 ஓவர்களில் 128 ரன்கள் மட்டுமே எடுத்து சுருண்டது.

    ஆசிய கோப்பை சூப்பர் 4 போட்டியில் பாகிஸ்தானை இந்தியா வீழ்த்திய நிலையில் பிசிசிஐ பாராட்டியுள்ளது.

    இதுகுறித்து பிசிசிஐயின் துணைத் தலைவர் ராஜீவ் சுக்லா கூறுகையில், " இன்று (நேற்று) விராட் கோலியும், கே.எல் ராகுலும் 2 விக்கெட்டுக்கு 356 ரன்கள் குவித்து அசத்தினர். இந்தியா அபாரமாக ஸ்கோர் செய்தது மக்களின் கற்பனைக்கும் அப்பாற்பட்டது. அவர்கள் வெளிப்படுத்திய விதம்... இது மிகப்பெரிய சாதனை. இது எங்களுக்கு கிடைத்த பெரிய வெற்றி. இந்திய அணிக்கு பல வாழ்த்துக்கள்" என்றார்.

    Next Story
    ×