search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    திருப்பூர் அணி வெற்றிபெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி
    X

    பந்தை விரட்டிய திருச்சி அணி வீரர்

    திருப்பூர் அணி வெற்றிபெற 158 ரன்களை இலக்காக நிர்ணயித்தது திருச்சி

    • ரூபி திருச்சி வாரியர்ஸ் முதல் விக்கெட்டுக்கு 57 ரன்கள் எடுத்தது.
    • அதிரடியாக ஆடிய முரளி விஜய் 16 பந்தில் 1 சிக்சர், 6 பவுண்டரி உள்பட 34 ரன்னில் வெளியேறினார்.

    நெல்லை:

    டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று இரவு நெல்லையில் நடைபெறும் ஆட்டத்தில் ரூபி திருச்சி வாரியர்ஸ், திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் விளையாடின. டாஸ் வென்ற திருப்பூர் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, திருச்சி அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்களான அமித் சாத்விக், முரளி விஜய் அதிரடியாக ஆடினர்.

    அணியின் எண்ணிக்கை 57 ஆக இருக்கும்போது முரளி விஜய் 34 ரன்னில் அவுட்டானார். அவரை தொடர்ந்து அமித் சாத்விக் 26 ரன்னில் வெளியேறினார். அடுத்து இறங்கிய நிதிஷ் ராஜகோபால் 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

    தொடர்ந்து இறங்கிய ஆதித்ய கணேஷ் 15 ரன்னிலும், அட்னன் கான் 13 ரன்னிலும், ஆண்டனி தாஸ் 13 ரன்னிலும் அவுட்டாகினர்.

    கடைசி கட்டத்தில் பொறுப்புடன் ஆடிய சரவணகுமார் 17 ரன்னும், மதிவண்ணன் 27 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

    இறுதியில், திருச்சி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை எடுத்தது. இதையடுத்து, 158 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திருப்பூர் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×