search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட் (Cricket)

    வார்னர், டிம் டேவிட் அதிரடி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 214 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா
    X

    வார்னர், டிம் டேவிட் அதிரடி: வெஸ்ட் இண்டீஸ் வெற்றிபெற 214 ரன்களை இலக்காக நிர்ணயித்தது ஆஸ்திரேலியா

    • முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.
    • அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 213 ரன்களைக் குவித்துள்ளது.

    சிட்னி:

    வெஸ்ட் இண்டீஸ் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியாவும், 2வது டெஸ்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியும் வெற்றி பெற்றன. அடுத்து நடந்த ஒருநாள் தொடரில் 3-0 என ஆஸ்திரேலியா அபார வெற்றி பெற்றது.

    இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆஸ்திரேலிய அணியின் தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அதிரடியாக ஆடினார். அவர் 36 பந்தில் ஒரு சிக்சர், 12 பவுண்டரி உள்பட 70 ரன்கள் குவித்து அவுட்டானார். இங்கிலிஸ் 39 ரன்னில் வெளியேறினார்.

    கடைசி கட்டத்தில் டிம் டேவிட், மேத்யூ வேட் ஜோடி அதிரடியாக ஆடி 50 ரன்களுக்கும் மேல் குவித்தது. டிம் டேவிட் 37 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

    இறுதியில், ஆஸ்திரேலிய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 213 ரன்கள் குவித்துள்ளது.

    வெஸ்ட் இண்டீஸ் சார்பில் ரசல் 3 விக்கெட்டும், அல்ஜாரி ஜோசப் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 214 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்குகிறது.

    Next Story
    ×