search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் பிரீமியர் லீக்: 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி
    X

    மரிசான் கேப் வீசிய யார்க்கர் பந்தில் கிளீன் போல்டான சபினேனி மேகனா

    மகளிர் பிரீமியர் லீக்: 10 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அபார வெற்றி

    • குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களே சேர்த்தது.
    • ஷபாலி வர்மா 28 பந்துகளில் 76 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார்.

    மும்பை:

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில், குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி, டெல்லி அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. முன்னணி வீராங்கனைகள் சோபிக்காத நிலையில், 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 105 ரன்களே சேர்த்தது. அதிகபட்சமாக கிம் கார்த் 32 ரன்கள் (நாட் அவுட்) அடித்தார். டெல்லி தரப்பில் மரிசான் கேப் 5 விக்கெட்டுகளும், ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

    இதையடுத்து 106 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, 77 பந்துகள் மீதமிருந்த நிலையில் இலக்கை எட்டியது. துவக்க வீராங்கனைகளான மெக் லேனிங் 21 ரன்களும், ஷபாலி வர்மா 76 ரன்களும் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தனர். இதனால் டெல்லி அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    Next Story
    ×