search icon
என் மலர்tooltip icon

    கிரிக்கெட்

    மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி
    X

    மகளிர் பிரீமியர் லீக்: குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 11 ரன் வித்தியாசத்தில் வெற்றி

    • நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய டெல்லி வீராங்கனை மாரிசான் கேப் 36 ரன்கள் சேர்த்தார்
    • கிம் கார்த், தனுஜா கன்வார், ஆஷ்லி கார்ட்னர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை பிரபோர்ன் ஸ்டேடியத்தில் நடந்த ஆட்டத்தில் குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் விளையாடின. முதலில் பேட்டிங் செய்த குஜராத் ஜெயண்ட்ஸ் அணி 20 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக லாரா வோல்வார்ட் 57 ரன்களும், ஆஷ்லி கார்ட்னர் 51 ரன்களும் (நாட் அவுட்) விளாசினர்.

    இதையடுத்து 148 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி களமிறங்கியது. ஆரம்பம் முதலே தடுமாறிய டெல்லி அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. கேப்டன் மெக் லேனிங் 18 ரன்கள், அலிஸ் கேப்சி 22 ரன்கள் எடுத்தனர்.

    நெருக்கடிக்கு மத்தியில் அதிரடியாக ஆடிய மாரிசான் கேப் 36 ரன்களும், அருந்ததி ரெட்டி 25 ரன்களும் அடித்து நம்பிக்கை அளித்தனர். எனினும் பின்கள வீராங்கனைகள் சோபிக்காததால் டெல்லி அணி 18.4 ஓவர்களில் 136 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் குஜராத் ஜெயண்ட்ஸ் 11 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கிம் கார்த், தனுஜா கன்வார், ஆஷ்லி கார்ட்னர் தலா 2 விக்கெட் எடுத்தனர்.

    Next Story
    ×