search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    • தேனி மாவட்டம் குச்சனூர் சென்று சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.
    • அவரை வலம்வரும்போது ‘ஓம் மந்தாய நம’ என்று கூறிக்கொண்டே வலம் வர வேண்டும்.

    மிதுனம் ராசியில் பிறந்தவர்கள் சனீஸ்வரரை தீபம் ஏற்றி வணங்கவும்.

    உங்களுக்கு மிக ஏற்புடைய ஒரே பரிகாரம் உழவாரப் பணிதான்.

    கோவிலை, குளத்தை சுத்தம் செய்யும்போது எட்டாமிட சனியின் தாக்கம், வேகம் குறையும்.

    பிரச்சினைகளை ஓரளவாவது சமாளிக்கும் துணிச்சல் வரும்.

    தேனி மாவட்டம் குச்சனூர் சென்று சனீஸ்வர பகவானை வழிபட வேண்டும்.

    அவரை வலம்வரும்போது 'ஓம் மந்தாய நம' என்று கூறிக்கொண்டே வலம் வர வேண்டும்.

    சனிக்கிழமைதோறும் அருகில் உள்ள சனீஸ்வர வழிபாடு அவசியம்.

    அருகில் உள்ள ஆஞ்சநேயரை வழிபடவும். துளசி சாற்றவும்.

    வீட்டில் ஆஞ்சநேயர் படத்திற்கு வாலில் குங்குமப்பொட்டு வைத்து வணங்கவும்.

    விநாயகரை சதுர்த்தியன்று வணங்கவும்.

    ஸ்ரீமிருத்யுஞ்ஜய மந்திரம் கூறவும். 'நமசிவாய நம' என்று கூறவும்.

    • விநாயகருக்கு இனிப்பு நிவேதனம் செய்து வழிபடவும்.
    • ஆஞ்சநேயருக்கு பழங்கள் நிவேதனம் செய்து சந்நிதியைச் சுற்றிவரவும்.

    ரிஷபம் ராசியல் பிறந்தவர்கள் சனிப்பெயர்ச்சியை முன்னிட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது நல்லது.

    முகம், வாய், கழுத்து இழுத்துக் கொண்டதுபோல் தோற்றமுள்ள மாற்றுத் திறனாளிக்கு அவ்வப்போது உணவுக்கும் மருந்துக்கும் உதவவும்.

    அடுத்து யோக ஆஞ்சநேயரை வணங்கவும்.

    ஆலயம், கல்வி கற்பிக்கும் இடம், நீதிமன்றம், பதிப்பகங்கள், பயண இடங்கள் இவற்றில் வேலை பார்க்கும் முதியவர்களுக்கு உங்களால் முடிந்த உதவிகளைச் செய்யுங்கள்.

    ரிஷபத்துக்குரிய தெய்வம் சுக்கிரனின் மகாலட்சுமி, எனவே உங்கள் இருப்பிடத்துக்கு அருகே உள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று வெள்ளி அல்லது சனிக்கிழமைதோறும் பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் விளக்கேற்றவும்.

    தாயாருக்கு நல்ல வெள்ளை நிறப் பூமாலை வாங்கி சாற்றவும்.

    முடிந்தவர்கள் சந்தன நிறப் பட்டாடையால் தாயாரைக் குளிர்விக்கவும்.

    சனிக்கிழமைகளில் அன்னதானம் செய்வது மிகவும் நல்லது.

    விநாயகருக்கு இனிப்பு நிவேதனம் செய்து வழிபடவும்.

    ஆஞ்சநேயருக்கு பழங்கள் நிவேதனம் செய்து சந்நிதியைச் சுற்றிவரவும்.

    திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் கோவில் மற்றும் திருக்கொள்ளிக்காடு சென்று வணங்கவும்.

    நேரம் கிடைக்கும் போதெல்லாம் சிவ அஷ்டோத்திரம் சொல்லி வந்தால் கைமேல் பலன் உண்டு.

    • மேஷம் ராசியில் பிறந்தவர்கள் திருநள்ளாறு சனி பகவானை வணங்க வேண்டும்.
    • இரும்புப் பொருட்களை தானம் செய்வது நன்று.

    மேஷம் ராசிக்காரர்கள் செய்ய வேண்டிய சனீஸ்வர பரிகாரங்கள்

    மேஷம் ராசியில் பிறந்தவர்கள் திருநள்ளாறு சனி பகவானை வணங்க வேண்டும்.

    இரும்புப் பொருட்களை தானம் செய்வது நன்று.

    உங்கள் வீட்டுக்கு அருகில் உள்ள முருகன் கோவிலுக்கு விளக்கு வசதி செய்து கொடுக்கலாம்.

    வயதானவர்களுக்கு உங்களால் முடிந்த அரசு உதவியைப் பெற்றுத்தரலாம்.

    உங்கள் ஊரில் உள்ள காளி அல்லது துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றவும், பைரவர், வீரபத்திரர் போன்ற தெய்வங்களை வணங்கி வரவும்.

    அருகில் உள்ள ஆஞ்சநேயரை சனிக்கிழமைதோறும் செந்தூரம் கொண்டு வழிபடவும், திருப்புறம்பியம், திருப்பைஞ்ஞீ (திருச்சி) தலங்களுக்கு சென்று வழிபடவும்.

    • அதே சமயம் செயற்கைக் கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.
    • இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்து விட்டனர்.

    சில வருடங்களுக்கு முன்பு, ஒரு அமெரிக்க செயற்கைக்கோள் பூமியின் குறிப்பிட்ட பகுதியினைக் கடக்கும் போது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்து விட்டது.

    3 வினாடிகளுக்குப் பிறகு வழக்கம் போல வானில் பறக்க ஆரம்பித்தது.

    இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியத்தை தந்தது.

    இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்தது.

    கிடைத்த ஆய்வு முடிவு நாசாவை மட்டுமல்ல. உலகத்தையே மிரள வைத்தது.

    எந்த ஒரு செயற்கைக் கோளும் திருநாள்ளாறில் சனிபகவான் வீற்றுள்ள ஸ்ரீதர்ப்பணேசுவரர் கோவிலுக்கு நேர்மேலே உள்ள வான் பகுதியினைக் கடக்கும் போது 3 வினாடிகள்... ஸ்தம்பித்து விடுகின்றன.

    அப்படி ஸ்தம்பிப்பதற்குக் காரணம்... ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் சனிக்கிரகத்திலிருந்து கண்ணுக்குப் புலனாகாத கரு நீலக்கதிர்கள் அந்தக் கோவில் மீது விழுந்து கொண்டே இருக்கின்றன.

    2 1/2 வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போதும் இந்த கரு நீலக்கதிர்களின் அடர்த்தி 45 நாட்கள் வரை மிக அடர்த்தியாக இருக்கின்றன.

    விண்வெளியில் சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக் கோள்கள் இந்த கருநீலக் கதிர்கள் பாயும் பகுதிக்குள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது ஸ்தம்பித்து விடுகின்றன.

    அதே சமயம் செயற்கைக் கோளுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    இந்த சம்பவத்திற்குப் பிறகு, நாசாவிலிருந்து பலமுறை திருநள்ளாற்றிக்கு நேரில் வந்து பல ஆராய்ச்சிகள் செய்து விட்டனர்.

    மனிதனுக்கு மீறிய சக்தி உண்டு என்பதினை உணர்ந்தனர்.

    அவர்களும் திருநள்ளாறு சனி பகவானை கையெடுத்துக் கும்பிட்டு வழிபட்டு சென்றனர்.

    இன்று வரையிலும், விண்ணில் மனிதனால் ஏவப்பட்டுள்ள செயற்கைக் கோள்கள் திருநள்ளாறு பகுதியைக் கடக்கும் போது 3 வினாடிகள் ஸ்தம்பித்துக் கொண்டே இருக்கின்றன.

    • நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது.
    • சரஸ்வதி தேவியின் வாகனம் அன்னப்பறவை ஆகும்.

    நவராத்திரி பூஜையின் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி பூஜை அனுசரிக்கப்படுகிறது. அம்பிகையை கொண்டாடும் நாட்களில் நவராத்திரி என்பது மிகவும் விசேஷமானது. ஒன்பது நாட்களில் முதல் மூன்று நாட்கள் அம்பிகை துர்க்கை அம்சமாக இருப்பதாக ஐதீகம்.

    அதற்கடுத்த மூன்று நாட்கள் மகாலட்சுமி அம்சமாக அருள்பாலிப்பதாக ஐதீகம். அதற்கடுத்த மூன்று நாட்கள் கல்விக்கு அதிபதியான சரஸ்வதியாக இருந்து அனைவருக்கும் ஞானம் அருள்வதாக ஐதீகம். அந்த வகையில் ஒன்பதாவது நாளில் சரஸ்வதி தேவிக்கு விசேஷ பூஜைகள் நடத்தப்படுகின்றன.


    கலை மற்றும் கல்வி ஆகியவற்றின் அதிபதியாக உள்ள சரஸ்வதி தேவி வெள்ளை தாமரையில் அமர்ந்து ஜடா மகுடம் சூடி, அதில் பிறை சந்திரனை அணிந்த பிரம்மாவின் மனைவியாக வழிபடப்படுகிறார்.

    அவருடைய வாகனம் வெண்மை நிறம் உள்ள அன்னப்பறவை ஆகும். வட இந்தியாவில் சில மாநிலங்களில் சரஸ்வதி தேவி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள் தருவது போன்ற கோவில்களும் உள்ளன.

    பண்டைய நூல்கள் சரஸ்வதி தேவியை அறிவின் கடவுளாக, ஞானத்தின் கடவுளாக புகழ்கின்றன. படைப்புக் கடவுளான பிரம்மாவின் நாவில் சரஸ்வதி இருந்து படைப்புக்கு உறுதுணை செய்வதாகவும் புராணங்கள் குறிப்பிடுகின்றன.

    அத்துடன் சமூக நலனுக்காக செய்யப்படும் வேள்விகளை நல்லவிதமாக நடத்துவதற்கு சரஸ்வதியின் அருள் கடாட்சம் வேண்டும் என்றும் ஆன்மீக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.


    புத்த மதத்தில் சரஸ்வதி தேவியை சிம்ம வாகனத்தில் எழுந்தருளச் செய்து வழிபடும் முறை இருந்திருக்கிறது.

    பண்டைய காலங்களில் அரசர்களும், புலவர்களும் அறிவார்ந்த விவாதங்கள் செய்யும் போது அவர்கள் உட்கார்ந்து உள்ள ஆசனங்களில் சரஸ்வதி கொடி இணைக்கப்பட்டு இருக்கும். அதை சாரதா த்வஜம் என்று குறிப்பிடுவார்கள். அந்த கொடியில் சரஸ்வதியின் திருவுருவம் அழகாக பொறிக்கப்பட்டிருக்கும்.

    நவராத்திரி நாட்களில் ஒன்பதாவது நாளான நவமி திதியில் சரஸ்வதி தேவியை முறைப்படி வழிபடும் பொழுது ஒருவர் அனைத்து கலைகளிலும் சிறந்து விளங்குவார் என்று ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகின்றன.

    அந்த வகையில் சரஸ்வதி பூஜை செய்வதற்கு ஒரு மேடை அமைத்து அதில் வெள்ளை விரிப்பை சரியாக விரித்து அதில் கலசம் வைத்து தேங்காய் மற்றும் மாவிலையை அதில் பொருத்த வேண்டும்.


    அதன் பிறகு சரஸ்வதி தேவியின் படம் அல்லது விக்கிரகம் ஆகியவற்றை வைத்து அதற்கு வெண்மை நிற மலர்களை சூடி இனிப்பான நிவேத்யங்கள் செய்து தூப தீபம் காட்டி வழிபடலாம். இல்லாவிட்டால் வேத விற்பன்னர்களை அழைத்து வந்து மந்திரப்பூர்வ பூஜை முறைகளையும் செய்யலாம்.

    பூஜையின் முக்கிய அம்சமாக சான்றோர்கள் குறிப்பிடுவது என்னவென்றால், ஏழைகளுக்கு வழங்கக்கூடிய பிரசாதம் அல்லது அன்னதானம் என்பதாகும்.

    வீடுகளில் அல்லது தொழில் நிறுவனங்களில் பூஜை செய்யப்படும் பொழுது அங்குள்ள ஊழியர்கள் மற்றும் இதர ஏழை மக்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கி அவர்கள் மனம் மகிழச் செய்வது சரஸ்வதியின் அனுகிரகத்தை பெற்று தரும் என்றும் சான்றோர்கள் தெரிவித்துள்ளார்கள்.

    • திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை.
    • திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு.

    இன்றைய பஞ்சாங்கம்

    குரோதி ஆண்டு புரட்டாசி-18 (வெள்ளிக்கிழமை)

    பிறை: வளர்பிறை.

    திதி: துவிதியை மறுநாள் விடியற்காலை 4.33 மணி வரை. பிறகு திருதியை.

    நட்சத்திரம்: சித்திரை இரவு 6.48 மணி வரை. பிறகு சுவாதி.

    யோகம்: சித்தயோகம்

    ராகுகாலம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை

    எமகண்டம்: காலை 3 மணி முதல் 4.30 மணி வரை

    சூலம்: மேற்கு

    நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை

    இன்று சந்திர தரிசனம். சங்கரன்கோவில் ஸ்ரீகோமதியம்மன் தங்கப் பாவாடை தரிசனம். திருத்தணி ஸ்ரீமுருகப் பெருமானுக்கு கிளி வாகன சேவை. ராமேசுவரம் ஸ்ரீபர்வதவர்த்தினியம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளி அம்பாள் தங்கப் பல்லக்கில் புறப்பாடு. கீழ்த்திருப்பதி ஸ்ரீகோவிந்தராஜப் பெருமாள் காலை திருமஞ்சன சேவை, மாலை ஊஞ்சல் சேவை. மாடவீதி புறப்பாடு. சிருங்கேரி ஸ்ரீசாரதாபீடம் ஸ்ரீஅம்பாள் ஹம்ச வாகனத்தில் பிராம்ஹி திருக்கோலமாய் காட்சியருளல். திருவிடைமருதூர் ஸ்ரீபிருகத் சுந்தரகுசாம்பிகை புறப்பாடு. லால்குடி ஸ்ரீபிரவிருந்த ஸ்ரீமதி என்கிற பெரு திருப்பிராட்டியார் சமேத ஸ்ரீசப்தரிஷீஸ்வரர் கோவிலில் சிறப்பு அபிஷேகம், அலங்காரம். சிவகாசி ஸ்ரீவிஸ்வநதர் சிறப்பு அபிஷேகம்.

    இன்றைய ராசிபலன்

    மேஷம்-நன்மை

    ரிஷபம்-பெருமை

    மிதுனம்-ஆக்கம்

    கடகம்-நட்பு

    சிம்மம்-உதவி

    கன்னி-ஆதரவு

    துலாம்- போட்டி

    விருச்சிகம்-தெளிவு

    தனுசு- போட்டி

    மகரம்-ஆக்கம்

    கும்பம்-அன்பு

    மீனம்-பரிசு

    • மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத்தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும்.
    • வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர்.

    நவக்கிரகங்களுக்கு ஏற்பட்ட தோஷத்தை நீக்கியவர் கும்பகோணத்தை அடுத்துள்ள ஆடுதுறையில் அமைந்துள்ள "திருமங்கலக்குடி பிராணவரதேஸ்வரர்".

    இத் தலம் மாங்கல்ய தோஷங்கள் நீக்கும் திருத்தலம் ஆகும்.

    முதலாம் குலோத்துங்க சோழனின் மந்திரி ஒருவர் வரிப் பணத்தைக் கொண்டு இக் கோவிலை கட்டினான்.

    இதனை அறிந்து சினமுற்ற மன்னன், அம் மந்திரியை சிரச் சேதம் செய்யுமாறு உத்தரவிட்டான்.

    அஞ்சி நடுங்கிய மந்திரியின் மனைவி இத் தல மங்களாம்பிகையிடம் வேண்டினாள்.

    மந்திரி தனது உடலை திருமங்கலக்குடியில் அடக்கம் செய்யுமாறு கேட்க, மன்னனும் அவ்வாறே செய்யுமாறு ஆணையிட்டான்.

    மந்திரியின் உயிரற்ற உடலை இத் தலம் எடுத்து வர, தனது பக்தையின் வேண்டுகோளுக்கிணங்க மந்திரியை உயிர்ப்பித்தாள் இத் தல நாயகி.

    இதனால் இவள் " மங்களாம்பிகை" எனவும், பிராணனை திரும்ப கொடுத்ததால் இறைவன் "பிராண வரதேஸ்வரர்" எனவும் வழிபடலாயினர்.

    மாங்கல்ய தோஷத்தால் திருமண தடை உள்ளவர்கள் இத்தல நாயகியை வழிபட திருமணத் தடை நீங்கும்.

    வழிபடும் பெண்களின் மாங்கல்ய பலம் பெருகும். இத் தலத்தின் பெயர் மங்களக்குடி, தல விநாயகர் மங்கள விநாயகர்.

    அம்பாள் மங்களாம்பிகை. தீர்த்தம் மங்கள தீர்த்தம். விமானம் மங்கள விமானம்.

    எனவே, இத் தலம் "பஞ்ச மங்கள ஷேத்திரம்" எனப்படுகிறது.

    • ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.
    • ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத்தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள "ஸ்ரீவாஞ்சியம்".

    காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும்.

    ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.

    ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும்.

    ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.

    இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும்.

    ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.

    இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வார்கள்.

    • மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.
    • எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும்.

    ஜாதகத்தில் மரண கண்டம் உள்ளவர்கள் தமது எம பயம், மரண பயம் நீங்க வணங்க வேண்டிய திருக்கோவில், கும்பகோணம் - காரைக்கால் சாலயில் கும்பகோணத்திலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ள, திருநீலகண்டராய் சிவ பெருமான் அருளும் "திருநீலக்குடியாகும்".

    மூலவருக்கு செய்யப்படும் தைலாபிஷேகம் சிறப்பு வாய்ந்தது.

    எவ்வளவு எண்ணெய் அபிஷேகம் செய்தாலும், அவ்வளவும் பாணத்திற்குள் சென்றுவிடும்.

    ராகு தோஷம் நீங்க உளுந்து, நீல வஸ்திரம், வெள்ளி நாகர், வெள்ளி பாத்திரம் போன்றவற்றை இத்தலத்தில் தானம் செய்ய வேண்டும்.

    எம, மரண பயங்கள் நீங்க இத் தல இறைவனை வழிபட்டு, பின்னர் எருமை, நீல துணிகள், எள் போன்றவற்றை தானம் செய்யவேண்டும்.

    • ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் “பிதுர் தோஷமே “.
    • பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

    கும்பகோணத்தை அடுத்துள்ள வலங்கைமான் அருகில் உள்ளது ஆவூர் பசுபதீஸ்வரர் திருக்கோவில்.

    இறைவன் பசுபதீஸ்வரர். இறைவி பங்கஜவல்லி.

    வசிஷ்ட முனிவரால் சாபம் பெற்ற காமதேனு என்ற பசு இறைவனை பூஜித்து சாப விமோஷனம் பெற்றதால் இத் தலம் ஆவூர் ஆனது. (ஆ என்றால் பசு).

    இத் திருத்தலத்தின் மற்றோர் சிறப்பம்சம் ஒரே பீடத்தில் குடிகொண்டுள்ள ஐந்து பைரவ மூர்த்திகள். தேய்பிறை அஷ்டமி திதிகளில் இந்த பஞ்ச பைரவரை வழிபட அனைத்து துன்பங்களும் நீங்குகிறது.

    இங்கு பஞ்ச பைரவர் வழிபாடு சிறந்த "பிதுர் தோஷ நிவர்த்தியாகும்".

    சிலர் நல்ல சம்பாத்தியம் பெறுவர். ஆனால் பஞ்சம் தீராது. நல்ல திறமைகளை கொண்டிருப்பார்கள்.

    ஆனால் சரியான வேலையோ அல்லது சம்பாத்தியமோ இருக்காது. அனைத்து செல்வங்களையும் பெற்றிருப்பர்.

    ஆனால் வாழ்வில் நிம்மதி இருக்காது. இப்படி எத்தனையோ காரணம் கூற முடியாத தொல்லைகளுக்கு காரணம் "பிதுர் தோஷமே ".

    பிதுர் தோஷம் தீர்த்தால் அனைத்து வளங்களும் நமது வாழ்வில் தேடி வரும் என்பது நிச்சயம்.

    • இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.
    • மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு!

    ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது.

    முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன.

    முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள "ரிண விமோஷன லிங்கேஸ்வரர்".

    கும்பகோணம் - திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத்தலம்.

    ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.

    இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.

    மாசி மாதத்தில் 13, 14, 15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது தனி சிறப்பு!

    • பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம்.
    • வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர்.

    தீராத கடன் தொல்லைகள் தீர, பில்லி, சூனியம், ஏவல் போன்றவற்றிலிருந்து விடுபட, வழக்குகளில் வெற்றி பெற, கும்பகோணத்திலிருந்து சுமார் 7 கி.மீ.

    தொலைவில், மயிலாடுதுறை வழித் தடத்தில் அமைந்துள்ள "திருபுவனம்" சென்று அங்கு தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் "சரபேஸ்வரரை" வழிபடலாம்.

    பறவை, விலங்கு, மனிதம் என மூன்று வடிவங்களை கொண்ட சரபர் சிவன், காளி, துர்க்கை மற்றும் விஷ்ணு என நான்கு கடவுளரின் ஒருமித்த ரூபம்.

    வேண்டுவோரின் சங்கடங்கள் தீர்ப்பவர். துயர் துடைப்பவர்.

    சூலினி, பிரத்தியங்கரா என இரு தேவியருடன் காட்சி தரும் சரபரை 11 விளக்கு, 11 சுற்று, 11 வாரம் என தரிசனம் செய்ய வழிபடுபவரது சங்கடங்கள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம்.

    ஞாயிற்று கிழமைகளின் ராகு கால வேளை சரபர் வழிபாட்டிற்கு மிகச் சிறந்த நேரம்.

    ×