search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    • இதைக்கண்ட அனைவரும் கண்ணனைப் பாராட்டினர்.
    • ஆனால் கம்சனுக்கு மட்டும் கண்ணணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

    கம்சன், கண்ணனை அழிக்க பல அசுரர்களை அனுப்பினான்.

    ஆனால் அவர்கள் அத்தனை பேரையும் கண்ணன் கொன்று குவித்தார்.

    அதனால் கோபம் கொண்ட கம்சன், "நான் தனுர்யாகம் செய்யப்போகிறேன் அதற்கு வேண்டிய பொருட்களுடன் நந்தகோபரை குடும்பத்துடன் இங்கு வரச் சொல்லுங்கள்" என்று அமைச்சர் அக்ரூரரிடம் கூறினான்.

    அமைச்சரும் அங்கு வந்தார். பலராமனும், கண்ணனும் கம்சனின் யாகசாலைக்குச் சென்றனர்.

    வழியில் குவலயபீடம் என்னும் யானைக்கு மதம் பிடித்தது.

    அது துதிக்கையால் இரும்பு உலக்கையை தூக்கி, கண்ணனனையும், பலராமனையும் தாக்க முயன்றது.

    அப்போது யானையின் தந்தத்தை ஒடித்து யானையையும், பாகனையும் கொன்றார் கண்ணன்.

    பின்னர் மல்யுத்த அரங்கிற்கு சென்றனர்.

    அங்கு கண்ணனை அழிக்க சானூரன், முஷ்டிகன், கூடன், சலன் போன்ற மல்யுத்த வீரர்கள் காத்திருந்தனர். அவர்களுடன் மல்யுத்தம் செய்து அவர்களை அழித்தார்.

    இதைக்கண்ட அனைவரும் கண்ணனைப் பாராட்டினர்.

    ஆனால் கம்சனுக்கு மட்டும் கண்ணணை எப்படியாவது பழிவாங்க வேண்டும் என்ற எண்ணமே இருந்தது.

    ஊரில் உள்ள சிறுவர்களை எல்லாம் வெட்டி சாய்ந்து விட்டு, வசுதேவர், தேவகியைக் கொல்லுங்கள் என்று அவன் கூறினான்.

    உடனே கண்ணன் அவன் மீது ஏறிக் குதித்து, அவனது தலையை பிடித்து தரையில் வேகமாக அடித்துக்கொன்றார்.

    இத்துடன் கம்ச வதம் முடிந்தது.

    கம்சனின் சிறையில் இருந்த தாய், தந்தை, பாட்டனார், உக்கிர சேனர் என்று அனைவரையும் விடுவித்து, கோகுலத்திற்கு அழைத்துச் சென்றார் கண்ணன்.

    கம்ச வதத்திற்குப்பின்பு மக்கள் பயமின்றி வாழ்த்தனர்.

    • கண்ணன் பிறந்தது விரஜபூமி என்ற வட மதுரா. வளர்ந்தது கோகுலம். வடமதுரா முக்தியளிக்கும் 7 நகரங்களுள் ஒன்று.
    • கண்ணன் என்றால் ராதை, ருக்மணி, பாமா இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால் கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு.

    இதுபோன்று கண்ணனுக்கு தொடர்ந்து இடையூறுகள் வந்தாலும், அவரது வளர்ப்பு பெற்றோரான நந்தகோபனும், யசோதையும் மற்றும் கோகுலவாசிகளும் பிருந்தாவனத்திற்கு இடம் பெயர்ந்தனர்.

    அங்கும் காளிங்கமடுவில் காளிங்கன் என்ற அசுரன் இருந்துகொண்டு அட்டகாசம் செய்து வந்தான்.

    கண்ணன் அவன் மீது ஏறி நின்று நர்த்தனம் ஆடி அவனை அடக்கினார்.

    இந்திரனது சூழ்ச்சியினால் பெய்த அடை மழையில் இருந்து கோவர்த்தன மலையைக் குடையாக பிடித்து பசுக்களையும், அங்கு இருந்த மக்களையும் காப்பாற்றினார்.

    கண்ணன் பிறந்தது விரஜபூமி என்ற வட மதுரா. வளர்ந்தது கோகுலம். வடமதுரா முக்தியளிக்கும் 7 நகரங்களுள் ஒன்று.

    கண்ணன் என்றால் ராதை, ருக்மணி, பாமா இவர்கள்தான் நினைவுக்கு வருவர். ஆனால் கண்ணனுக்கு 8 மனைவிகள் உண்டு.

    ருக்மணி, சத்யபாமா, காளிந்தி, ஜாம்பவதி, விக்ரவிந்தை, சத்யவதி, பத்திரை, லட்சுமணை இப்படி 8 பேர் பட்ட மகரிஷிகள். ஒவ்வொரு மனைவிக்கும் தலா 10 குழந்தைகள் பிறந்தன.

    கிருஷ்ணரின் பிள்ளைகளில் மிகவும் புகழ் பெற்றவர்கள் 18 பேர்.

    அவர்கள் பிரத்யும்னன், அனுருத்தன், தீப்திமான், பானு சாம்பன், மது, பருஹத்பானு, சித்ரபானு, விருகன், அருணன், புஷ்கரன், வேதபாசு, ஸ்ருததேவன், சுருந்தனன், சித்திரபாகு, விருபன், கவிநியோக்தன்.

    • பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சி அளித்தார்.
    • பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானார்.

    எப்போதெல்லாம் உலகத்தில் அதர்மம் தலை தூக்குகிறதோ அப்போதெல்லாம் பகவான் அவதரிக்கிறார்.

    அதன்படி அதர்மத்தை அழிக்க பகவான் பூலோகத்தில் பிறந்த நாளே கிருஷ்ண ஜெயந்தி.

    ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி அன்று, ரோகிணி நட்சத்திரத்தில் நள்ளிரவில் சிறைக்குள் வசுதேவர்-தேவகிக்கு மகனாக ஸ்ரீ கிருஷ்ணர் அவதரித்தார்.

    பிறந்தபோது சங்கு, சக்கரம், தாமரை, கதாயுதம் ஏந்திய கைகளுடன் ஸ்ரீ கிருஷ்ணர் காட்சி அளித்தார்.

    பெற்றோரின் வேண்டுகோளுக்கு இணங்க சாதாரணக் குழந்தை வடிவானார்.

    3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தா வனத்திலும், 7 வயதில் கோபியர் கூட்டத்திலும், 8 வயது முதல் 10 வயது வரை மதுராவிலும் ஸ்ரீகிருஷ்ணரின் இளம் வயது கழிந்தது.

    தன்னை வதம் செய்யவே கண்ணன் பிறந்திருக்கிறான் என்று எண்ணினான் கம்சன்.

    அதனால் அவனை அழிக்க பல அரக்கர்களை அனுப்பினான். முதலில் வந்தவள் பூதகி என்ற அரக்கி.

    அவள் பால் தருவது போல் நடித்தாள். ஆனால் கண்ணனோ அவளிடம் பாலைக் குடிப்பது போல் குடித்து அவளைக் கொன்று விட்டார்.

    அரக்கியை தொடர்ந்து அரக்கர்கள் பல்வேறு உருவங்களில் வந்தார்கள்.

    பராசுரன் கொக்காகவும், தேனுகாசுரன் கழுதையாகவும், பிரலம்பன் சிறுவனாகவும், அரிஷ்டன் காளையாகவும், கேசி குதிரையாகவும் உருவம் எடுத்து கண்ணனைக் கொல்ல முயன்றனர்.

    ஆனால் 5 வயதில் இருந்த கண்ணன் அவர்களை எல்லாம் துவம்சம் செய்து கொன்றார்.

    • பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.
    • யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும்.

    கிருஷ்ணன் அவதரித்த மதுரா, ராதை அவதரித்த பர்ஸானா, ஆயர்பாடியான கோகுலம் எல்லாம் `விரஜபூமி'யில் உள்ளன.

    `பிருந்தா' என்பது துளசியைக் குறிக்கும் என்று கூறுவர். பிருந்தாவனத்தில் தான் கண்ணன், மாடு கன்றுகளை மேய்த்தான்.

    பிருந்தாவனத்தில் 12 வனங்கள் உண்டு. இவற்றுள் யமுனைக்கு மேற்கில் ஏழும், கிழக்கில் ஐந்தும் உள்ளன.

    பிருந்தாவனத்தில் தான் கிருஷ்ண லீலைகள் எல்லாம் நிகழ்ந்தன.

    கிருஷ்ணன் மேய்த்த மாடு, கன்றுகளையும், மற்ற கோபாலச் சிறுவர்களையும் ஓராண்டுக் காலம் பிரம்மன் ஒளித்துக் கொண்டு போன பொழுது அவை எல்லாமாகத் தானே இருந்து, பிரம்மனைக் கண்ணன் மயக்கிய இடமும் இதுவே!

    பிருந்தாவனத்தில் நூற்றுக்கணக்கான பழைய மற்றும் நவீன ஆலயங்களும், காண வேண்டிய இடங்களும் பல உள்ளன.

    யமுனையில் நீராடிய பின் இந்த தலங்களை அவசியம் தரிசிக்க வேண்டும்.

    கேசீகாட், காளிய மதன்காட், சீர்காட், ரமண்ரேதீ, வம்சீவட், சேவாகுஞ்ச், நிதிவனம், பாங்கே விஹாரி மந்திர், ராதா ரமண் மந்திர், கோவிந்தஜி மந்திரி, ரங்கஜி மந்திர் முதலானவை முக்கிய தலங்களாகும்.

    இவற்றுள் பாங்கே விஹாரி கோவிலில் அடிக்கடி திரையால் மூலஸ்தானத்தை மறைப்பார்கள்.

    தரிசிக்க வரும் பக்தர்கள் பின்னால் குறும்புக்கார கண்ணன் ஓடி விடுவான் என்ற பயம் தான் இதற்குக் காரணம்.

    மதுராவிற்கு சற்று வடமேற்கில் சுமார் 11 கி.மீ. தொலைவில் உள்ள பிருந்தாவனம், அவசியம் அன்பர்கள் தரிசித்து மகிழ வேண்டிய தலமாகும்.

    • பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.
    • கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்கள் இவை.

    கிருஷ்ணர் வளர்ந்த பிருந்தாவனத்தின் ெபருமை அளவிடற்கரியது. உத்திரப்பிரதேச மாநிலத்தில், மதுரா மாவட்டத்தில் இத் திருத்தலம் அமைந்துள்ளது.

    பகவான் கிருஷ்ணன் குழந்தைப் பருவத்தில் பல அற்புதத் திருவிளையாடல்களை நிகழ்த்திய இடம் இதுவே.

    கண்ணனின் பால லீலைகளோடும், மற்றும் இளமைக் கால வாழ்க்கையோடும் தொடர்புடைய இடங்கள் இவை.

    வட நாட்டில் உத்தரபிரதேச மாநிலத்தில் இதன் பெரும் பகுதி உள்ளது.

    சில பகுதிகள் அதன் அண்டை மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் ஹரியானாவிலும் அமைந்துள்ளன.

    இந்த `விரஜபூமி' சுமாராக 285 கி.மீ. சுற்றளவு கொண்டது.

    இதை வலமாகக் சுற்றி வருவது, `விரஜ பரிக்ரமா' எனப்படும். இதில் பெரிய சிறிய பாதைகள் உண்டு.

    இப்படி வலம் வர இயலாதவர்கள் கோவர்தன மலையை வலம் வந்து வணங்குவர்.

    உடலளவில் அதற்கும் முடியாதவர்கள், மதுரா அல்லது பிருந்தாவனத்தை வலம் வருவதும் உண்டு.

    பக்தர்கள் அனைவரும் இதில் ஈடுபடுகிறார்கள் என்ற ேபாதிலும், நிம்பார்க்கர் மற்றும் வல்லபர் மரபைச் சேர்ந்த வைணவ அடியார்கள், `பரிக்ரமா'வை முக்கியமாகக் கருதுகிறார்கள்.

    கிருஷ்ண ஜன்மாஷ்டமியன்று பிருந்தாவனம் சென்று சேர இதைச் செய்கிறார்கள்.

    ெபரிய பாதை வழியாகச் சென்று இதை முடிக்கச் சுமார் இரண்டு மாதங்கள் வரை கூட ஆகலாம்.

    • ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும்.
    • கேரளா போன்ற இடங்களில் ‘மோகினி ஆட்டம்’ நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தியன்று ஸ்ரீகிருஷ்ணனுக்கு விசேஷ அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். அப்போது கிருஷ்ண அஷ்டோத்திரம் சொல்லப்பட்டு பூஜை செய்யப்படும்.

    சில ஆலயங்களில் கலசங்கள் வைத்து ஹோமங்கள் செய்து கலசநீரால் ஸ்ரீகிருஷ்ணனுக்கு அபி ஷேக ஆரா தனை செய்விக்கப்படும்.

    பெண்கள் கோபிகா கீதம், திருப்பாவை முதலியவற்றிலிருந்து பாடல்களைப்பாடுவார்கள். நாராயணீயத்தில் இருந்து கிருஷ்ண லீலைகள் பற்றிய பாடல்களைப்பாடுவார்கள்.

    ஆண்கள், கிருஷ்ணனின் பெருமைகளை பஜனைப் பாடல்களாகப் பாடுவார்கள்.

    இசைக்கருவிகளான மத்தளம், ஆர்மோனியம், புல்லாங்குழல், கஞ்சிரா, ஜால்ரா போன்றவை பயன்படுத்தப்பட்டு எங்கும் 'ஹரே ராமாஹரே கிருஷ்ணா, என்ற கோஷங்கள் ஒலிக்கும்.

    ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடைபெறும். சில ஆலயங்களில் கிருஷ்ண லீலைகள் நாடகமாக நடித்துக் காட்டப்படும்.

    கேரளா போன்ற இடங்களில் 'மோகினி ஆட்டம்' நடைபெறும். சில ஆலயங்களில் உறியடி நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    இரவு உற்சவர் புறப்பாடு நடைபெறும்.

    உற்சவர் வீதி உலா வரும்போது பின்னால் பஜனை செய்து கொண்டு பக்தர்கள் வருவார்கள்.

    முன்னால், கிருஷ்ணர் ராதை வேடமிட்டவர்கள் ஆடிப்பாடிக் கொண்டு செல்வார்கள்.

    பறைகள் முழங்க, கொம்புகள் ஊத, நாதஸ்வரம் ஒலிக்க ஸ்ரீகிருஷ்ணர் வீதி உலா வருவார்.

    பகவான் திரும்ப ஆலயத்துக்குள் எழுந்தருளியதும் ஆரத்தி காட்டப்படும். மங்கள வாத்தியங்கள் முழங்க, கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு வழிபாடுகள் நிறைவடையும். பக்தர்களுக்குப் பிரசாதங்கள் வழங்கப்படும்.

    இவ்வாறு ஆலயங்களில் கிருஷ்ண ஜெயந்தி விழா பலவித முறைகளில் கொண்டாடப்பட்டு வருகிறது.

    வழுக்குமரம் ஏறுதல், உறியடி போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.

    • மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.
    • அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    கிருஷ்ண பரமாத்வை எப்படி வழிபட வேண்டும் தெரியுமா?

    ஸ்ரீகிருஷ்ண பூஜை செய்வதற்கு முன் வழிபடுவர் நடுவிரலால் விஷ்ணுவைப் போல் இரண்டு நேர் கோடுகளை வரையவும் அல்லது அடர்த்தியான ஒரு நேர் கோட்டை போட்டுக் கொள்ளவும்.

    ஸ்ரீ கிருஷ்ணனுக்கு மோதிர விரலில் சந்தனம் இட வேண்டும்.

    கிருஷ்ணகமல் பூவால் அர்ப்பணம் செய்ய வேண்டும்.

    மூன்று அல்லது மூன்றின் பெருக்குத் தொகை எண்ணிக்கை உள்ள பூக்களை அர்ப்பணிக்க வேண்டும்.

    அர்ப்பணம் செய்யும் போது பூவின் காம்பு கிருஷ்ணனை நோக்கியிருக்க வேண்டும்.

    பூக்களை நீள்வட்ட வடிவத்தில் அலங்கரிக்க வேண்டும்.

    சந்தனம், தாழம்பூ, மல்லிகை, மணம் கொண்ட ஊதுபத்தியை உபயோகிக்க வேண்டும்.

    வாசனை திரவியங்களில் சந்தனம் உபயோகிக்க வேண்டும்.

    ஸ்ரீ கிருஷ்ணனை மூன்று முறை அல்லது மூன்றின் ெபருக்கல் தொகை எண்ணிக்கை பிரதட்சணம் செய்ய வேண்டும்.

    • இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் மலை குடைக்குள் வரவழைத்து பாதுகாப்பு அளித்தார்.
    • அவ்வாறு ஏழு நாட்கள் கோவர்த்தன கிரியைத் தாங்கிப் பிடித்து ஆயர்களைக் காத்தார் பகவான்.

    ஆயர்பாடியில் மழை வேண்டி ஆண்டு தோறும் இந்திரனுக்கு விழா எடுப்பது வழக்கம். இதை அறிந்த கிருஷ்ணர் இந்திரனுக்கு விழா எடுப்பதைத் தடுத்து விட்டார்.

    அவர்களுக்கு வாழ்வளிக்கும் பசுக்களுக்கும் மலைகளுக்கும் விழா எடுக்க வேண்டியது அவசியம் என்றார்.

    எனவே, யாதவர்கள் கண்ணனின் ஆலோசனைப்படி கோவர்த்தனகிரி யாகத்தைத் தொடங்கினர்.

    தூப தீபம் ஏற்றி ஆராதனை செய்து கோவர்த்தனகிரியைப் பூஜித்தார்கள்.

    பசுக்களையும் பூஜித்தனர். பின்பு, நன்றாக அலங்கரிக்கப்பட்ட பசுக்களும் கன்றுகளும் அந்த மலையை வலம் வந்தன.

    இவ்வாறு மலைக்கு ஆராதனை செய்தபோது, கிருஷ்ணன் ஒரு தேவரூபமாக அந்த கோவர்த்தன மலையின் சிகரத்தில் வீற்றிருந்து, யாதவர்கள் அருளிய நைவேத்தி யங்களை எல்லாம் ஏற்று அருளினார். மலைச் சிகரத்தையும் அர்ச்சித்துப் பணிந்த பிறகு, யாதவர்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் ஆயர்பாடிக்கு திரும்பினர்.

    இவ்வாறு கிருஷ்ணர் இந்திரனுக்கு செய்ய வேண்டிய யாகத்தைத் தடுத்து அவனை அவமானப்படுத்தியதால், இந்திரன் கோபம் கொண்டு சர்வர்த்தகம் என்ற மேகக் கூட்டங்களை அழைத்து, 'கிருஷ்ணன் வசித்து வரும் இடைச்சேரியில் பெருமழை பெய்வித்து, மாடுகளை எல்லாம் அவிழ்த்து விடுங்கள்' என்று கட்டளையிட்டான்.

    இந்திரனின் கட்டளைக்கிணங்க மேகங்கள் யாவும் ஆயர்பாடி முற்றிலும் நாசமாகும்படி பெருங்காற்றுடன் பெருமழையையும் பெய்வித்தன.

    இதனால் பசுக்களும் கன்றுகளும் துன்பப்பட்டன. காற்றினாலும் கடுங்குளிரினாலும் நடுங்கின. பயந்தகுரலில் கத்தின.

    பெருமழை காரணமாக கோகுலத்தில் உள்ள அனைவரும் துன்பப்பட்டனர். இதைக்கண்ட ஸ்ரீகிருஷ்ணர், 'இந்த நிலைக்கு இந்திரனே காரணம்.

    ஆதலால், கோகுலத்தைக் காப்பாற்றுவது அவசியம்' என்று கிரியையே பெயர்த்து எடுத்து, ஒரு குடையைப் போல் தாங்கிப் பிடித்தார்.

    இடையர் அனைவருக்கும் பசுக்களுக்கும் கன்றுகளுக்கும் மலை குடைக்குள் வரவழைத்து பாதுகாப்பு அளித்தார்.

    அவ்வாறு ஏழு நாட்கள் கோவர்த்தன கிரியைத் தாங்கிப் பிடித்து ஆயர்களைக் காத்தார் பகவான்.

    இந்திரன் தன் முயற்சி வீணானதைக் கண்டு மேகங்களின் செயல்களை நிறுத்தினான்.

    மழை நின்றது. ஆயர்கள் அனைவரும் மகிழ்வுடன் தங்களுடைய இருப்பிடத்திற்குத் திரும்பிச் சென்றனர்.

    தேவேந்திரன் தன் தவறை உணர்ந்தான். மகா விஷ்ணுவே கிருஷ்ணராக அவதரித்திருக்கிறார் என்பதை அறிந்தான்.

    தன் செயலுக்காக கிருஷ்ணரிடம் மன்னிப்புக் கோரினான். தன்னைத் துதிப்பவர்களை கிருஷ்ணர் கை விட மாட்டார் என்பதை இந்த நிகழ்ச்சி மூலம் உணரலாம்.

    • பாரதப் போரின் போதுதான் பகவத் கீதை குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்குப் போதிக்கப்பட்டது.
    • இந்த கீதா தத்துவத்தை முற்காலத்திலேயே சூரிய தேவனுக்கு பகவான் உபதேசித்தார் என்ற விவரமும் பகவத் கீதையில் காணப்படுகிறது.

    ஸ்ரீகிருஷ்ணர் இப்பூவுலகில் தனது அவதார நோக்கத்துக்காகப் பல அற்புதங்களை புரிந்தார்.

    தேரோட்டிய சாரதி : பாரதப் போரில் அர்ஜுனனுக்குத் தேரோட்டியாக வந்து பஞ்சபாண்டவர்களைக் காத்தார். தனது விஸ்வரூப தரிசனத்தை அர்ஜுனனுக்குக் காட்டி அருளினார்.

    பகவத் கீதை :

    பாரதப் போரின் போதுதான் பகவத் கீதை குருஷேத்திரப் போர்க்களத்தில் பகவான் கிருஷ்ணரால் அர்ஜுனனுக்குப் போதிக்கப்பட்டது.

    இந்த கீதா தத்துவத்தை முற்காலத்திலேயே சூரிய தேவனுக்கு பகவான் உபதேசித்தார் என்ற விவரமும் பகவத் கீதையில் காணப்படுகிறது.

    பகவத் கீதையின் ஒரு குறிப்பிட்ட அம்சம் என்னவென்றால், யோக முயற்சிகளினால் அடைய வேண்டிய பலன் என்னவென்பது ஒரு போர்க்களத்தின் நடுவே கற்பிக்கப்பட்டது.

    பகவத் கீதையில் கர்மயோகம், பக்தி யோகம், ஞான யோகம் என்ற மூன்று விதமான யோக முறைகள் விவரிக்கப்பட்டுள்ளன.

    இந்துக்களின் வேதமாக பகவத் கீதை திகழ்கின்றது.

    • கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.
    • கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

    1. மகாவிஷ்ணு எடுத்த 9-வது அவதாரம் கிருஷ்ணா அவதாரமாகும்.

    2. கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டங்களில் உறியடி விழா தான் பிரசித்தமாக நடைபெறும்.

    3. மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் வாழ்வில் இயல்பாக அமைந்த கடமைகளை முழுமையாக செய்ய வேண்டும் என்பதை பகவத்கீதை மூலம் கிருஷ்ணர் உணர்த்தியுள்ளார்.

    4. சென்னையில் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாட்டம் பல்வேறு இடங்களில் நடந்தாலும் ராயப்பேட்டையில் உள்ள கவுடியா மடத்தில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.

    5. கிருஷ்ணர் தமிழ்நாட்டில் கண்ணன் என்றும் வட மாநிலங்களில் கண்ணையா என்றும் அழைக்கப்படுகிறார்.

    6. கிருஷ்ணருக்கு கேசவன், கோவிந்தன், கோபாலன் ஆகிய பெயர்களும் உண்டு.

    7. கிருஷ்ணர் இளம்வயதில் கோகுலத்தில் வாழ்ந்ததால், அவர் அவதரித்த கிருஷ்ண ஜெயந்தியை கோகுலாஷ்டமி என்றும் சொல்வார்கள்.

    8. கிருஷ்ணர் ஜெயந்தி தினத்தன்று கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த சீடை, அவல் லட்டு, அப்பம், தட்டை, முள்ளு முறுக்கு, தோயம், வெண்ணை பால்திரட்டு, நாட்டு சர்க்கரை போன்றவைகளை படைத்து வழிபட வேண்டும்.

    9. கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தையின் பாத சுவடுகளை தெருவில் இருந்து வீட்டுக்குள் வருவது போல வரைய வேண்டும். இதனால் கிருஷ்ணரே வீட்டுக்கு வருவதாக ஐதீகம்.

    10. கிருஷ்ண ஜெயந்தியை கேரளாவில் "அஷ்டமி ரோகிணி" என்றழைக்கிறார்கள்.

    11. கிருஷ்ணர் கோகுலத்தில் இளம் வயதில் கோபியர்களுடன் சேர்ந்து விளையாட்டுக்களில் ஈடுபட்டதை "ராசலீலா" என்ற பெயரில் நாடகமாக நடத்தப்படுவது வடமாநிலங்களில் பழக்கத்தில் உள்ளது.

    12. கிருஷ்ணர் நள்ளிரவில் பிறந்ததாக புராண வரலாறுகளில் சொல்லப்பட்டுள்ளது. எனவே கிருஷ்ண ஜெயந்தி அன்று இரவு வழிபாடு நடத்துவது உகந்தது.

    13. கிருஷ்ணர் 3 வயது வரை கோகுலத்திலும், 3 முதல் 6 வயது வரை பிருந்தாவனத்திலும் 7-ம் வயதில் கோபியர்களுடனும் 8 முதல் 10 வயது வரை மதுராவிலும் வாழ்ந்தார்.

    14. கம்சனை வதம் செய்த போது, கிருஷ்ணருக்கு வயது 7.

    15. கிருஷ்ண பரமாத்மாவின் அருளை பெற "கீதகோவிந்தம்", "ஸ்ரீமந் நாராயணீயம்", "கிருஷ்ண கர்ணாம்ருதம்" ஆகிய பாடல்களால் துதித்து வணங்க வேண்டும்.

    16. கிருஷ்ணர் ஜெயந்தியன்று சிறுவர் - சிறுமிகளை கண்ணன், ராதைகள் வேடமிட்டு ஆராதிப்பது கூடுதல் பலன்களைத் தரும். இப்படி வேடமிடும் குழந்தைகள் புத்திசாலிகளாகத் திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.

    17. கண்ணனை வழிபட்டால் அகந்தை அகலும். குழந்தைகளுக்கு மூர்க்க குணம் ஏற்படாது. இளைஞர்கள் தர்மசீலராக வாழ்வார்கள். அரசியல்வாதிகளுக்கு நிர்வாகத் திறமை அதிகரிக்கும்.

    18. பெண்கள் கண்ணனை மனம் உருகி போற்றி வழிபட்டால் திருமண தடைகள் விலகி கல்யாணம் கைகூடும்.

    19. விவசாயிகள் கிருஷ்ணரை வழிபட்டால் வயல்களில் விளைச்சல் அதிகரித்து செல்வம் பெருகும். மாடுகள் எண்ணிக்கை பெருகி கடன் தீரும்.

    20. தொழில் அதிபர்கள் கிருஷ்ணருக்கு சிறப்பான பூஜைகள் செய்தால், புகழ் கூடும். கூட்டுத் தொழில் செய்தால் வெற்றி பெறுவார்கள். தொழில் நிர்வாகத்தில் ஆற்றல் பெருகும்.

    21. கிருஷ்ண லீலையை மனம் ஒன்றி கேட்டால் பசி, தாகம் ஏற்படாது.

    22. கிருஷ்ண நாமத்தை தினமும் உச்சரிப்பவர்களும், கேட்பவர்களும் புண்ணிய உலகை சென்றடைவது உறுதி.

    23. பாகவதத்தில் உள்ள அவதார கட்டத்தை பாராயணம் செய்வது மிகுந்த புண்ணியத்தைத் தரும். அந்த பாராயணத்தை கேட்டாலும் புண்ணியம் கிடைக்கும்.

    24. கிருஷ்ண ஜெயந்தியன்று கிருஷ்ணரின் அருள் 100 சதவீதம் அதிகரிப்பதாக பக்தர்கள் நம்புகிறார்கள்.

    25.ஓம் நமோ பகவதே வாசுதேவாயா என்று ஜெபித்தால் கிருஷ்ணர் பார்வைபடும்.

    • கிருஷ்ணர் சிறையில் பிறந்த போதே பலவகை ஆபரணங்களுடன் தோன்றினார்.
    • அவரது தந்தை வசுதேவர், குழந்தையை ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் வீட்டில் விட்டு வந்தார்.

    கிருஷ்ணர் சிறையில் பிறந்த போதே பலவகை ஆபரணங்களுடன் தோன்றினார்.

    அவரது தந்தை வசுதேவர், குழந்தையை ஆயர்பாடியில் உள்ள நந்தகோபர் வீட்டில் விட்டு வந்தார்.

    அப்போது, ஆயர்குலப் பெண்கள் குழந்தையைப் பார்க்க பலவகை ஆபரணங்கள் அணிந்து வந்தனர்.

    விஷ்ணு அலங்காரப் பிரியர். அவரைப் பார்க்க வந்தவர்களும் சகல அலங்காரத்துடன் வந்தனர்.

    எனவே அட்சய திரிதியை, ஆடிப்பெருக்கு நாளில் நகை வாங்குவதுபோல, கிருஷ்ணஜெயந்தி நன்னாளிலும் நகை வாங்கி அணியலாம்.

    • ஐகத் மந்திர் எனப்படும் இங்குள்ள கோவிலின் பிரதான வாயிலை சொர்க்க துவாரம் என்பர்கள்.
    • எப்போதும் திறந்தே இருக்கும். இந்த வாயிலைக் கடந்தால் மோட்ச துவாரம்.

    சொர்க்க துவாரம்! மோட்ச துவாரம்!

    வைணவ திருத்தலங்களில்,பெருமாள் பள்ளிக் கொண்டிருக்கும் கோலத்தைத் தரிசித்திருக்கிறோம்.

    அதேபோல் ஸ்ரீகிருஷ்ணர் சயன கோலத்தில் அருளும் தலம் துவாரகை.

    இந்த தலத்தில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று திருநாமம்.

    ஐகத் மந்திர் எனப்படும் இங்குள்ள கோவிலின் பிரதான வாயிலை சொர்க்க துவாரம் என்பர்கள்.

    எப்போதும் திறந்தே இருக்கும். இந்த வாயிலைக் கடந்தால் மோட்ச துவாரம். இதையும் தாண்டிச் சென்றால் கண்ணனின் திவ்விய தரிசனம் கிடைக்கும்.

    கண்ணன் ஆடிய கூத்து !

    கண்ணன் ஆடிய கூத்துக்கள் மூன்று. மதம் பிடித்த யானையின் தந்தத்தை ஒடித்தபோது ஆடியது அல்லியக் கூத்து.

    பேரன் அநிருத்தனை அசுரன் ஒருவன் சிறைப்பிடித்து வைத்த போது பஞ்சலோகத்தால் ஆன குடத்தைத்தலையில் வைத்தபடி ஆடியது குடக்கூத்து.

    வாணன் எனும் அசுரனைப் போரிட்டு அழித்த போது ஆடியது மல்லாடல் கூத்து!

    ×