search icon
என் மலர்tooltip icon

    ஜெர்மனி

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் அமெரிக்க வீராங்கனை காலிறுதிக்கு முன்னேறினார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்க வீராங்கனை கோகோ காப், ரஷிய வீராங்கனை அலெக்சாண்ட்ரோவா உடன் மோதினார்.

    இதில் கோகோ காப் 7-6 (8-6), 6-2 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் கஜகஸ்தான் வீராங்கனை ரிபாகினா வென்றார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கஜகஸ்தான் வீராங்கனை எலினா ரிபாகினா,

    ரஷிய வீராங்கனை வெரோனிகா குடர்மெடோவா உடன் மோதினார்.

    இதில் ரிபாகினா 6-4, 7-5 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.

    நாளை நடைபெறும் காலிறுதியில் ரிபாகினா, பெலாரஸ் வீராங்கனை அசரென்காவை சந்திக்கிறார்.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடந்துவருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா வெற்றி பெற்றுள்ளார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, துருக்கி வீராங்கனை சன்மாஸ் உடன் மோதினார்.

    இதில் அசரென்கா 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் பெலாரஸ் வீராங்கனை அசரென்கா வெற்றி பெற்றார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் பெலாரஸ் வீராங்கனை விக்டோரியா அசரென்கா, கிரீஸ் வீராங்கனை மரியா சக்காரியுடன் மோதினார்.

    இதில் அசரென்கா 6-4, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

    • பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மனியில் நடைபெற்று வருகிறது.
    • இதில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா தோல்வி அடைந்தார்.

    பெர்லின்:

    பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் ஜெர்மன் தலைநகர் பெர்லினில் நடைபெற்று வருகிறது.

    இதில் இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நவாமி ஒசாகா, சீன வீராங்கனை குயின்வென் ஜெங்குடன் மோதினார்.

    இதில் நவாமி ஒசாகா 4-6, 6-3, 3-6 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்தார். இதன்மூலம் தொடரில் இருந்து வெளியேறினார்.

    இரண்டாவது சுற்றில் சீன வீராங்கனை குயின்வென் ஜெங், செக் வீராங்கனை சினியா கோவாவை சந்திக்கிறார்.

    • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
    • ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது.

    ஐரோப்பிய நாடுகளுக்கு இடையிலான யூரோ கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் தொடங்கி நடைபெற்று வருகிறது. சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை கொண்ட இந்தப் போட்டியில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன.

    ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாக பிரித்து லீக் போட்டி நடைபெறுகிறது. இதில் க்ரூப் இ பிரிவில் பெல்ஜியம் மற்றும் ஸ்லோவாகியா அணி மோதின. போட்டியில் முதல் கோலை ஸ்லோவேகியா அணி 56 நிமிடத்தில் அடித்தது.

    இதையடுத்து பெல்ஜியம் அணியால் எவ்வளவு போராடியும் கோல் அடிக்க இயலவில்லை. இதனால் இந்த போட்டியில் ஸ்லோவேகியா அணி 1-0 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது.

    இந்த வெற்றியின் மூலம் க்ரூப் இ பிரிவில் ஸ்லோவேகியா முதலிடம் பிடித்து அசத்தியுள்ளது. இது யாரும் எதிர்பார்க்காத வெற்றியாகும்.ஸ்டனீஸ்லாவ்  ரொபொட் ஆட்ட நாய்கனாக் தேர்வு செய்யப்பட்டார்.

    • ஆட்டத்தின் 16-வது நிமிடத்தில் போலந்து அணி ஒரு கோல் அடித்தது.
    • 29 மற்றும் 83-வது நிமிடங்களில் நெதர்லாந்து அணி கோல் அடித்து வென்றது.

    பெர்லின்:

    17-வது ஐரோப்பிய கோப்பை கால்பந்து போட்டி ஜெர்மனியில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் 24 நாடுகள் பங்கேற்றுள்ளன.

    இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெற்ற லீக் போட்டியில் போலந்து, நெதர்லாந்து அணிகள் மோதின.

    ஆட்டத்தின் 16வது நிமிடத்தில் போலந்தின் ஆடம் புக்சா ஒரு கோல் அடித்து தனது அணிக்கு முன்னிலை பெற்றுக் கொடுத்தார். இதற்கு பதிலடியாக ஆட்டத்தின் 29வது நிமிடத்தில் நெதர்லாந்தின் காகி காக்போ ஒரு கோல் அடித்து சமனிலைக்கு கொண்டு வந்தார். முதல் பாதியில் இரு அணிகளும் 1-1 என சமனிலை வகித்தன.

    இரண்டாவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் போட முயன்றனர். கடைசியில் ஆட்டத்தின் 83வது நிமிடத்தில் நெதர்லாந்தின் வெகோர்ஸ்ட் ஒரு கோல் அடித்து தனது அணியை முன்னிலைப்படுத்தினார்.

    இறுதியில், நெதர்லாந்து 2-1 என கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

    • பாராளுமன்ற தேர்தலின் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நேற்று நடந்தது.
    • தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெறுகிறது.

    பெர்லின்:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெற்றது. நேற்று இறுதிக்கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்தது. தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி ஜூன் 4-ம் தேதி நடைபெற உள்ளது.

    இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலை ஜனநாயக முறைப்படி சிறப்பாக நடத்தி முடித்துள்ள இந்தியாவுக்கு ஜெர்மனி, நைஜீரிய நாடுகள் பாராட்டு தெரிவித்துள்ளன.

    இதுதொடர்பாக ஜெர்மன் வெளியுறவு அலுவலகம் எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலை வெற்றிகரமாக முடித்த இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். இந்தியாவின் புதிய அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றவும், இந்தியா உடனான நமது ஒத்துழைப்பை அடுத்தகட்டத்திற்கு கொண்டு செல்லவும் நாங்கள் ஆவலுடன் காத்திருக்கிறோம் என பதிவிட்டுள்ளது.

    இதேபோல், நைஜீரிய வெளியுறவுத்துறை மந்திரி யூசுப் மைதாமா எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ஜனநாயகத்தில் உலகின் கோட்டையாக விளங்கும் இந்திய மக்களுக்கு வாழ்த்துகள். 1.4 பில்லியன் மக்கள்தொகையில் 968 மில்லியனுக்கும் அதிகமான வாக்காளர்களைக் கொண்டு, 44 நாட்கள் நீடித்த இந்த தேர்தல் வரலாற்றிலேயே மிகப் பெரியது. ஆப்பிரிக்காவின் மிகப்பெரிய ஜனநாயக நாடாக நாங்கள் உங்களுடன் இணைந்து கொள்கிறோம். வெற்றிகரமான தேர்தல் காலத்திற்கு மீண்டும் ஒருமுறை வாழ்த்துகள் என பதிவிட்டுள்ளார். இந்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது.
    • ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர்.

    பெர்லின்:

    ஜெர்மனியின் டஸ்ஸல்டோர்ப் நகரில் வசித்து வந்த தம்பதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். பின்னர் ஜெர்மனியில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்துடன் அவர்கள் போர்க்கப்பல்களின் எந்திரங்கள் தயாரிப்பது தொடர்பான ஒப்பந்தம் செய்தனர். இதற்கிடையே சீன பாதுகாப்பு துறையை சேர்ந்த ஒருவருடன் அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. இதனால் ஜெர்மனி ராணுவ தொழில்நுட்பங்களை அவருக்கு அறிவித்தனர்.

    இதனையடுத்து சீனாவுக்கு உளவு பார்த்ததாக அந்த தம்பதி உள்பட 3 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதன்பேரில் போலீசார் அவர்களை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சமீபத்தில் ரஷியாவுக்கு உளவு பார்த்ததாக 2 பேர் அங்கு கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் தற்போது சீனாவுக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

    • தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரெயிலிலேயே கழித்து வருகிறார்.
    • தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.

    ரெயில் பயணத்தை சிறுவர்கள் விரும்புவார்கள். ஆனால் ரெயிலிலேயே 2 வருடங்களாக வாழ்க்கையை கழிக்கும் ஒரு சிறுவனை பற்றிய தகவல்கள் சமூக வலைதளத்தில் பேசுபொருளாகி உள்ளது.

    ஜெர்மனியில் உள்ள லாஸ் ஸ்டோலி என்பவர் தனது 15 வயதில் இருந்தே ரெயிலில் வாழ ஆசை என பெற்றோரிடம் கூறி வந்துள்ளார். இதற்கு அவரது பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், லாஸ் ஸ்டோலி அதனை பொருட்படுத்தாமல் தினமும் ரெயிலிலேயே தனது வாழ்க்கை பயணத்தை கழிக்க தொடங்கினார். தினமும் முதல் வகுப்பு பெட்டியிலேயே 1,000 கிலோ மீட்டர் பயணம் செய்யும் இவர் டிபன், உணவு, தூக்கம் என அனைத்தையும் ரெயிலிலேயே கழித்து வருகிறார். இதற்காக அதிக செலவு செய்கிறார்.

    ஆனால் ஜெர்மன் ரெயில்வே வழங்கும் வருடாந்திர ரெயில் அட்டையை பெற்றுள்ள லாஸ் ஸ்டோலி ஒரு வருடத்திற்கு எத்தனை முறை வேண்டுமானாலும், முதல் வகுப்பில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். இதற்காக இந்திய மதிப்பில் ரூ.8.5 லட்சம் செலவு செய்கிறார். அதே நேரம் அவர் தான் தினமும் பயணம் செய்யும் வீடியோக்களை தனது வலைதளத்தில் பகிர்ந்து அதன் மூலம் வருமானம் ஈட்டி வருகிறார்.

    • அந்த மீன் உள்ள நீர்த்தொட்டியை கடக்கும் போது வினோத சப்தம் கேட்டது
    • இந்த மீனின் உடல் கண்ணாடியை போன்று ஒளி-ஊடுருவும் விசேஷ தன்மையை கொண்டது

    ஜெர்மனியின் தலைநகர் பெர்லின் (Berlin) நகரில் ஒரு ஆராய்ச்சி கூடத்தில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் வினோத ஒலி கேட்டது.

    இதற்கான காரணத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் தீவிரமாக முனைந்தனர்.

    இதில், டேனியோனெல்லா செரிப்ரம் (Danionella cerebrum) எனும் மிகச் சிறிய வகை மீன் ஒன்று அதன் அங்கங்களில் ஒன்றான "ஸ்விம் ப்ளாடர்" (swim bladder) எனும் உறுப்பில் இருந்து சக்திமிக்க சீரான ஒலியை உண்டாக்குவது தெரிய வந்தது.

    இந்த மீன் வெளிப்படுத்தும் ஒலியின் அளவு மீன் தொட்டியின் நீர் நிலைகளில் 140 டெசிபெல் (decibel) என பதிவாகியுள்ளது.

    இது ஒரு துப்பாக்கி சூட்டின் ஒலிக்கு நிகரானது என்பது குறிப்பிடத்தக்கது.


    12 மில்லிமீட்டர் நீளம் மட்டுமே உள்ள இந்த டெனியோனெல்லா மீன் எழுப்பும் ஒலிதான் உலகின் அனைத்து வகை மீன் இனத்திலும் எழுப்பப்படும் அதிகமான ஒலியாகும்.

    "டிரம்மிங்" (drumming) எனப்படும் இத்தகைய ஒலியானது ஒரு வகையான செய்தி பரிமாற்றம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.

    டெனியோனெல்லா மீன்களின் உடல் கண்ணாடி போன்று ஒளி-ஊடுருவும்தன்மை (transparent) கொண்டதால் அவை உயிருடன் இயங்கும் போதே ஆராய்ச்சி செய்வது எளிதாக இருந்தது.

    இந்த ஆராய்ச்சியின் போதுதான் டெனியோனெல்லா இருந்த மீன் தொட்டியை கடந்து சென்றவர்கள் அது எழுப்பும் ஒலியை கேட்க முடிந்தது.

    மிகச் சிறிய வகை மீன் மிக அதிக ஒலியை எழுப்பும் வினோதம், ஆராய்ச்சியாளர்களை மட்டுமின்றி கடல்வாழ் உயிரின ஆர்வலர்களுக்கும் சுவாரஸ்யமான செய்தியாக உள்ளது.

    இது குறித்து மேலும் விஞ்ஞானிகள் ஆராய்ந்து வருகின்றனர்.

    • ஐரோப்பாவிலேயே லுஃப்தான்ஸா விமான சேவை 2-ஆம் இடம் வகிக்கிறது
    • லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்

    ஜெர்மனியின் புகழ் பெற்ற விமான சேவை நிறுவனம், லுஃப்தான்சா (Lufthansa).

    அதிக எண்ணிக்கையில் பயணிகளை ஏற்றி செல்வதில் ஐரோப்பாவிலேயே லுஃப்தான்சா விமான சேவை இரண்டாம் இடம் வகிக்கிறது.

    லுஃப்தான்சா விமான நிறுவனத்தில் சுமார் 1 லட்சம் பேர் பணிபுரிகின்றனர். இந்த விமான நிறுவனத்தின் பல்வேறு நிலையங்களில் தரை கட்டுப்பாட்டில் பணி புரியும் 25,000 ஊழியர்களுக்காக அவர்கள் இணைந்துள்ள வெர்டி (Verdi) தொழிற்சங்கம், நிறுவனத்துடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

    ஜெர்மனியின் பல துறைகளை சேர்ந்த ஊழியர்களை கொண்ட மிக பெரிய தொழிலாளர் நலச்சங்கம் வெர்டி என்பது குறிப்பிடத்தக்கது.

    ஆனால், இதில் சுமூக முடிவு எட்டப்படாததால், லுஃப்தான்சா விமான தரைக்கட்டுப்பாட்டு ஊழியர்கள் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். இதனால், ஃப்ராங்க்ஃபர்ட், மியூனிச், ஹாம்பர்க், பெர்லின் மற்றும் டஸ்ஸல்டார்ஃப் ஆகிய இடங்களுக்கான விமான சேவை பாதிக்கப்பட உள்ளது.

    இந்த வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ள வெர்டி தொழிற்சங்கம், பிப்ரவரி 7, புதன்கிழமை காலை 04:00 மணிக்கு தொடங்கி மாலை 07:10 மணி வரை பணி நிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது.


    இதனால் சுமார் 90 சதவீத விமான சேவைகள் பாதிக்கப்படுவதுடன் 1 லட்சம் பயணிகளுக்கும் பயண தடை ஏற்படும்.

    வெர்டி தொழிற்சங்கம், ஊழியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் 12.5 சதவீத உயர்வை கோரி போராடி வருகிறது. ஒரு-நாள் அடையாள வேலைநிறுத்தத்தில் பயன் இல்லையென்றால் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக வெர்டி அறிவித்துள்ளது.

    கடந்த சில மாதங்களாகவே ஜெர்மனியில் விமானம், பேருந்து, ட்ராம் (tram), ரெயில், டிரக் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகளிலும், விவசாய துறையிலும் பல வேலைநிறுத்த போராட்ட அறிவிப்புகள் வந்தவண்ணம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×